Extension of Samba season paddy insurance period in Ranipet district
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சம்பா பருவ நெல் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:
பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-2023 சம்பா பருவ நெல் பயிர் காப்பீடு தமிழகத்தில் 2022 செம்டபர் மாதம் 15ம் தேதி முதல் 2022 நவம்பர் மாதம் 15ம் தேதி வரை நடைபெற்றது.
தமிழக வவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் சம்பா பயிர் காப்பீடு செய்ய கடைசி நாளாக இம்மாதம் 21ம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது.
எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இம்மாதம் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை மூன்று நாட்களில் சம்பா நெல் பயிருக்கான பயிர் காப்பீடுகளை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் மூலம் பயிர் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.