ஆற்காடு பகுதியில் பைக் திருடிய இளைஞரை கைது செய்து, அவரிடமிருந்து 10 பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஆற்காடு பகுதியில் காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக பைக்கில் வந்த வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த சூர்யா (21) என்பவரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
இதில், அவர் ஆற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பைக்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்த 10 பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.