🌹 1858ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி அமெரிக்க அதிபராக மிக இளம் வயதில் பொறுப்பேற்றவரும், சிறந்த எழுத்தாளருமான தியோடர் ரூஸ்வெல்ட், நியூயார்க் நகரில் பிறந்தார்.
🌹 1961ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 என்ற விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது.
முக்கிய தினம் :-
காலாட்படை தினம்
🌸 காலாட்படை தினம் அக்டோபர் 27ஆம் தேதி இந்திய ராணுவத்தால் கடைபிடிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பின் 1947ஆம் ஆண்டு இதே நாளில், ஸ்ரீநகர் விமான நிலையத்தை கைப்பற்ற நினைத்த தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்க இந்திய ராணுவ வீரர்கள் போரிட்டு முதல்முறையாக வெற்றி பெற்றனர். இதைப் போற்றும் விதமாக இந்திய காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது.
உலக பாரம்பரிய ஆடியோ விஷுவல் தினம்
🌷 உலக பாரம்பரிய ஆடியோ விஷுவல் தினம் அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோ அமைப்பானது இத்தினத்தை 2005ஆம் ஆண்டு அறிவித்தது. ஆடியோ ஆவணங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
🌷 தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், ஆடியோ சங்கங்கள், தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே கூட்டு முயற்சி ஏற்படுத்த இத்தினம் முதன்முதலாக 2007ல் அனுசரிக்கப்பட்டது.
நினைவு நாள் :-
🌹 1605ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி முகலாய மன்னன் அக்பர் மறைந்தார்.
பிறந்த நாள் :-
ஜத்தின் தாஸ்
ஜத்தின் தாஸ் என்று அறியப்படும் ஜதீந்திர நாத் தாஸ் 1904ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.
இவர் ஒரு புரட்சிகர இந்திய விடுதலை வீரர் ஆவார். 1921ஆம் ஆண்டு அண்ணல் காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார்.
1929 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் நாள் சாகும் வரை உண்ணா நோன்பை லாகூர் சிறையில் துவக்கினார். 60 நாட்கள் மேல் தொடர்ந்த இந்தப் போராட்டம் ஜத்தின் தாஸின் மரணத்தால் முடிவுற்றது.
1929ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி ஜத்தின் தாஸ் உயிர் நீத்தார்.
இன்றைய நிகழ்வுகள்
939 – இங்கிலாந்தின் மன்னர் ஏத்தெல்சுத்தான் இறந்ததை அடுத்து முதலாம் எட்மண்டு மன்னராக முடிச் சூடினார்.
1275 – ஆம்ஸ்டர்டம் நகரம் அமைக்கப்பட்டது.
1644 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: நியூபெரியில் இரண்டாம் தடவை போர் இடம்பெற்றது.
1682 – பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரம் அமைக்கப்பட்டது.
1795 – எசுப்பானியக் குடியேற்றங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லைகளை வரையறுக்கும் உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையில் மத்ரித் நகரில் செய்துகொள்ளப்பட்டது.
1806 – பிரெஞ்சுப் படையினர் பெர்லின் நகரினுள் நுழைந்தனர்.
1810 – மேற்கு புளோரிடாவின் முன்னாள் எசுப்பானியக் குடியேற்றங்களை அமெரிக்கா இணைத்துக் கொண்டது.
1867 – கரிபால்டியின் படைகள் ரோம் நகருள் புகுந்தன.
1870 – 140,000 பிரெஞ்சுப் படை வீரர்கள் மெட்சு நகரில் இடம்பெற்ற போரில் புருசியாவிடம் சரணடைந்தனர்.
1904 – முதலாவது சுரங்க நியூயார்க் நகர சப்வே பாதை திறக்கப்பட்டது. இதுவே ஐக்கிய அமெரிக்காவில் மிகப் பெரியதும், உலகில் மிகப் பெரிய சுரங்கப் பாதைகளில் ஒன்றும் ஆகும்.
1907 – அங்கேரியில் செர்னோவா என்ற இடத்தில் கிறித்தவக் கோவிலில் வழிபாட்டின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
1914 – முதலாம் உலகப் போரில் பிரித்தானிக் கடற்படை முதலாவது தோல்வியைச் சந்தித்தது. ஓடாசியசு என்ற போர்க்கப்பல் அயர்லாந்தின் வடமேற்கே செருமனியின் கண்ணிவெடித் தாக்குதலில் மூழ்கியது.
1922 – தென்னாப்பிரிக்க ஒன்றியத்தில் இணைய ரொடீசியாவில் இடம்பெற்ற பொதுவாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.
1924 – உஸ்பெக் சோவியத் குடியரசு சோவியத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டது.
1936 – திருமதி வாலிசு சிம்ப்சன் மணமுறிவு பெற்றார். இது அவருக்கு இங்கிலாந்தின் மன்னர் எட்டாம் எட்வர்டைத் திருமணம் புரிய வழிவகுத்தது. இத்திருமணத்தால் எட்டாம் எட்வர்டு முடிதுறக்க நேரிட்டது.
1958 – பாக்கித்தானின் முதலாவது அரசுத்தலைவர் இஸ்காண்டர் மிர்சா இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து இறக்கப்பட்டு இராணுவத் தலைவர் அயூப் கான் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1961 – நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 ஏவூர்தியை விண்ணுக்கு ஏவியது.
1961 – மூரித்தானியா, மங்கோலியா ஆகியன ஐக்கிய நாடுகள் அவையில் சேர்ந்தன.
1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி: கியூபாவில் அமெரிக்காவின் யூ-2 விமானம் சோவியத் தயாரிப்பு நில வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
1971 – காங்கோ மக்களாட்சிக் குடியரசு சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1973 – 1.4 கிகி விண்வீழ்கல் கொலராடோவின் கேனன் நகரைத் தாக்கியது.
1979 – செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1981 – பனிப்போர்: சோவியத் நீர்மூழ்கி ஒன்று சுவீடனின் கிழக்குக் கரையில் மூழ்கியது.
1982 – யாழ்ப்பாணம், சாவகச்சேரி காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டது.
1990 – வட இலங்கை முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம்: யாழ்ப்பாண மாவட்டத்தைத் தாயகமாக கொண்ட முசுலிம்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.
1991 – துருக்மெனிஸ்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
1999 – ஆர்மீனிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பிரதமர், அவைத் தலைவர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
2005 – பாரிசில் இரண்டு முசுலிம் இளைஞர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது.
2007 – காங்கோவில் இடம்பெற்ற பெரு வெள்ளம் காரணமாக 30 பேர் உயிரிழந்து, 100 பேர் காயமடைந்தனர்.
2014 – 2002, சூன் 20 இல் ஆரம்பிக்கப்பட்ட எரிக் இராணுவ நடவடிக்கையை முடித்துக் கொண்டு பிரித்தானிய இராணுவம் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறியது.
2017 – காத்தலோனியா எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
இன்றைய பிறப்புகள்
1782 – நிக்கோலோ பாகானீனி, இத்தாலிய இசைக்கலைஞர் (இ. 1840)
1855 – இவான் விளாதிமீரொவிச் மிச்சூரின், உருசியத் தாவரவியலாளர் (இ. 1935)
1858 – தியொடோர் ரோசவெல்ட், அமெரிக்காவின் 26வது குடியரசுத் தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1919)
1904 – ஜத்தீந்திர நாத் தாஸ், இந்திய விடுதலைப் போராளி, புரட்சியாளர் (இ. 1929)
1911 – பதே சிங், சீக்கிய சமய, அரசியல் தலைவர் (இ. 1972)
1920 – கே. ஆர். நாராயணன், இந்தியாவின் 10வது குடியரசுத் தலைவர் (இ. 2005)
1932 – சில்வியா பிளாத், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1963)
1941 – சிவகுமார், தமிழக நடிகர்
1942 – மாவை சேனாதிராஜா, இலங்கை அரசியல்வாதி, ஈழ செயற்பாட்டாளர்
1945 – லுலா ட சில்வா, பிரேசிலின் 35வது அரசுத்தலைவர்
1946 – இவான் ரியட்மேன், செக்-கனடிய நடிகர்
1952 – ரொபேர்டோ பெனினி, இத்தாலிய நடிகர், இயக்குநர்
1968 – திலீப், மலையாள நடிகர்
1977 – குமார் சங்கக்கார, இலங்கைத் துடுப்பாளர்
1985 – சுனிதா ராவ், இந்திய-அமெரிக்க டென்னிசு வீராங்கனை
1986 – டேவிட் வார்னர், ஆத்திரேலிய துடுப்பாளர்
இன்றைய இறப்புகள்
1449 – உலுக் பெக், பாரசீக வானியலாளர், சுல்தான் (பி. 1394)
1605 – அக்பர், முகலாயப் பேரரசர் (பி. 1542)
1845 – சான் சார்லசு அத்தனாசு பெல்த்தியே, பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1785)
1930 – எல்லன் காயேசு, அமெரிக்கக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1851)
1982 – ழான் ஃபில்லியொசா, பிரான்சிய இந்தியவியலாளர், தமிழறிஞர் (பி. 1906)
2001 – மரகதம் சந்திரசேகர், இந்திய அரசியல்வாதி (பி. 1917)
2002 – வாழப்பாடி ராமமூர்த்தி, தமிழக அரசியல்வாதி (பி. 1940)
2011 – எல். ஐ. சி. நரசிம்மன், தமிழகத் திரைப்பட நடிகர்
2019 – அபூ பக்கர் அல்-பக்தாதி, இசுலாமிய அரசுத் தலைவர் (பி. 1971)
இன்றைய சிறப்பு நாள்
விடுதலை நாள் (செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1979)