🌷 2003ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி குறுங்கோள் ஏரிஸின் படங்கள் எடுக்கப்பட்டன.




முக்கிய தினம் :-


உலக அயோடின் தினம் 

🌟 உலக அயோடின் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அயோடின் பற்றாக்குறை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

🌟 அயோடின் சத்துக் குறைபாட்டால் இளம் வயதினரின் அறிவுத்திறன் பாதிக்கப்படும். பெரியவர்களுக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்படும். எனவே தினமும் அயோடின் கலந்த உப்பினைப் பயன்படுத்த வேண்டும் என்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.



நினைவு நாள் :-


முத்துசுவாமி தீட்சிதர்

🎶 இசை மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படும் முத்துசுவாமி தீட்சிதர் 1775ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி திருவாரூரில் பிறந்தார்.

🎶 சிறுவயதிலேயே வேதம், சாஸ்திரம், தர்க்கம், வியாகரணம் (இலக்கணம்), காவியம் ஆகிய அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். திருவாரூர் கோவிலில் உள்ள அனைத்து கடவுள்கள் மீதும் பாடல் இயற்றியுள்ளார்.

🎶 இவர் முருகனையே தன் குருவாக நினைத்தார். இவரது பாடல்களில் குருகு என்ற வார்த்தை இல்லாமல் இருக்காது. தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதத்தில் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.

🎶 பஞ்ச பூதங்கள், தெய்வங்கள், நவகிரகங்கள், புண்ணிய தீர்த்தங்கள், மொழிகள், மாயை குறித்து பாடல்கள் இயற்றியுள்ளார். நவாவர்ணக் கீர்த்தனைகள், பஞ்சலிங்க ஸ்தல கிருதிகள், கமலாம்பா நவாவர்ணம், அபயாம்பா நவாவர்ணம் உள்ளிட்ட பல கீர்த்தனைத் தொகுப்புகளை இயற்றியுள்ளார்.

🎶 இவர் 72 மேளகர்த்தா ராகங்களிலும் கீர்த்தனை இயற்றியுள்ளார். வறட்சி நிலவிய கிராமத்தில் அமிர்தவர்ஷினி ராகத்தில் கீர்த்தனை பாடி மழையை வரவழைத்தார் என்று கூறப்படுகிறது. இதனால் அமிர்தவர்ஷினி ராகத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார்.

🎶 அரிதான, அதிகம் பயன்படுத்தப்படாத ராகங்களிலும்கூட கீர்த்தனைகள் பாடிய முத்துசுவாமி தீட்சிதர் தனது 60வது வயதில் 1835ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


ஆல்ஃபிரட் நோபல்

🌹 நோபல் பரிசினை உருவாக்கிய ஆல்ஃபிரட் நோபல் 1833ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி சுவீடனில் பிறந்தார். இவர் 1857-ல் எரிவாயு மீட்டர் குறித்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்றார். மேலும் வெடிபொருட்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு, 1863-ல் வெடி மருந்தைக் கண்டுபிடித்தார்.

🌹 பல முயற்சிகளுக்குப் பிறகு டைனமைட்டையும், சேஃப்டி பவுடரையும் 1867-ல் இவர் கண்டுபிடித்தார். 1875-ல் பிளாஸ்டிக் ஜெலட்டினைக் கண்டுபிடித்தார். சிறிய ஆயுதங்களுக்குத் தேவைப்படும் புகை வெளியிடாத பாலிஸ்டைட் வகை கன் பவுடரையும் கண்டுபிடித்தார்.

🌹 இவர் போஃபர்ஸ் என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளரானார். இவரது நினைவாக நோபலியம் என்று ஒரு தனிமத்துக்கு பெயரிடப்பட்டது. இவர் சர்வதேச அளவில் 350 காப்புரிமைகளைப் பெற்றார்.

🌹 உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளை, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட காரணமாக இருந்த ஆல்ஃபிரெட் நோபல் தனது 63-வது (1896) வயதில் மறைந்தார்.



சுர்ஜித் சிங் பர்னாலா 

🌺 தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா 1925ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி ஹரியானாவிலுள்ள அட்லியில் பிறந்தார். 

தமிழ்நாட்டின் மாநில ஆளுநராக நவம்பர் 3, 2004ஆம் ஆண்டு முதல் ஏழு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

🌺 இவர் 1942ஆம் ஆண்டு லக்னோவில் இருந்தபோது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டார். 1967ஆம் ஆண்டு பர்னாலாவில் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார்.

🌺 1969ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில கல்வி அமைச்சரானார். 1977ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகி மொரார்ஜி தேசாய் தலைமையில் விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சரானார். 1985ஆம் ஆண்டு சிரோமணி அகாலி தள் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பஞ்சாப் மாநில முதல்வரானார்.

🌺 மக்களவை உறுப்பினராக 1996 மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு வேதிப்பொருட்கள், உரம் மற்றும் உணவுத்துறை அமைச்சரானார். அதிக ஆண்டுகள் ஆளுநராக இருந்தவர்களில் ஒருவரான சுர்ஜித் சிங் பர்னாலா தனது 91வது வயதில் மறைந்தார்.


இன்றைய நிகழ்வுகள்


1097 – முதலாம் சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முற்றுகை ஆரம்பமானது.

1209 – நான்காம் ஒட்டோ புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.

1520 – பெர்டினென்ட் மகலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகெல்லன் நீரிணை எனப் பெயர்பெற்றது.

1805 – நெப்போலியப் போர்கள்: டிரபல்கார் என்ற இடத்தில் நெல்சன் பிரபு தலைமையில் பிரித்தானியப் படைகள், பிரெஞ்சு, மற்றும் எசுப்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரித்தானியக் கடற்படையை 20ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது.

1824 – யோசப் ஆசுப்டின் போர்ட்லாண்டு சிமெண்டுக்கான காப்புரிமத்தை பெற்றார்.

1833 – இலங்கையில் புதிய மீயுயர் நீதிமன்றம் நிறுவப்பட்டது.[1]

1854 – புளோரன்ஸ் நைட்டிங்கேல் 38 செவிலியருடன் கிரிமியப் போர் முனைக்கு அனுப்பப்பட்டார்.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்பினரிடம் வர்ஜீனியாவில் தோற்றனர். ஆபிரகாம் லிங்கனின் நெருங்கிய நண்பர் "எட்வேர்ட் பேக்கர்" கொல்லப்பட்டார்.

1876 – யாழ்ப்பாணத்தில் வாந்திபேதி நோய் வேகமாகப் பரவியது. பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.[2]

1879 – தாமசு ஆல்வா எடிசன் தனது வெள்ளொளிர்வு விளக்குக்கான வடிவமைப்புக்கு காப்புரிமம் கோரினார்.

1892 – உலக கொலம்பியக் கண்காட்சி சிக்காகோவில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. ஆனாலும், கட்டிட வேலைகள் பூர்த்தியடையாத காரணத்தால் இக்கண்காட்சி 1893, மே 1 ஆம் நாளிலேயே பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது.

1895 – சப்பானியப் படைகளின் முற்றுகையினால் போர்மோசா குடியரசு வீழ்ந்தது.

1931 – சப்பானியப் பேரரசின் இராணுவத்தினரின் சக்குரக்காய் என்ற இரகசியக் குழு இராணுவப் புரட்சியை நிகழ்த்தித் தோல்வி கண்டது.

1943 – சுபாஷ் சந்திர போஸ் நாடு கடந்த இந்திய அரசை அறிவித்தார்.

1944 – இரண்டாம் உலகப் போர்: உருசியாவில் கலினின்கிராதில் செருமனியக் குடிமக்கள் பலர் செஞ்சேனையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: ஆஃகன் சண்டை: செருமனியின் ஆஃகன் நகரம் அமெரிக்கர்களிடம் வீழ்ந்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய விமானப் படையினரின் முதலாவது கமிக்காசு தற்கொலைத் தாக்குதல் ஆத்திரேலியா கப்பல் மீது நடத்தப்பட்டது.

1945 – பிரான்சில் முதற்தடவையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1956 – கென்யாவில் கிளர்ச்சித் தலைவர் தெதான் கிமத்தி பிரித்தானிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டார்.

1959 – வெர்னர் வான் பிரவுன் உடபப் பல செருமனிய அறிவியலாளர்களை அமெரிக்க இராணுவத்தில் இருந்து நாசாவுக்குப் பணி மாற்றம் செய்யும் உத்தரவை அமெரிக்க அரசுத்தலைவர் டுவைட் டி. ஐசனாவர் பிறப்பித்தார்.

1966 – வேல்சில் அபெர்ஃபான் என்னும் கிராமத்தில் நிலக்கரி கழிவுகள் அடங்கிய பாறை வீழ்ந்ததில் 116 பாடசாலைச் சிறுவர்கள் உட்பட 144 பேர் உயிரிழந்தனர்..

1969 – சோமாலியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் சியாட் பார் பதவியைக் கைப்பற்றி சோமாலிய சோசலிசக் குடியரசை அறிவித்தார்.

1971 – இசுக்காட்ஃப்லாந்து, கிளாஸ்கோ நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் எரிவாயு வெடிப்பினால் 22 உயிரிழந்தன்ர்.

1983 – நிறைகளுக்கும் அளவைகளுக்குமான 17வது அனைத்துலகக் கருத்தரங்கில், முழுமையான வெற்றிடத்தில், துல்லியமாக 1/299,792,458 வினாடி நேரத்தில் ஒளி செல்லும் பாதையின் நீளமாக ஒரு மீட்டர் வரையறுக்கப்பட்டது.

1987 – யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள்: யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இந்திய இராணுவத்தினர் சுட்டதில் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் உட்பட 70 பேர் வரை கொல்லப்பட்டனர்.

1994 – சியோல் நகரில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டனர்.

2005 – குறுங்கோள் ஏரிசின் படங்கள் எடுக்கப்பட்டன.

இன்றைய பிறப்புகள்


1328 – கோங்வு, சீனப் பேரரசர் (இ. 1398)

1772 – சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ், ஆங்கிலேயக் கவிஞர், மெய்யியலாளர் (இ. 1834)

1790 – அல்போன்சு டி லாமார்ட்டின், பிரான்சியக் கவிஞர், அரசியல்வாதி (இ. 1869)

1833 – ஆல்பிரட் நோபல், சுவீடன் வேதியியலாளர், நோபல் பரிசை ஆரம்பித்தவர் (இ. 1896)

1877 – ஓஸ்வால்ட் அவேரி, கனடிய-அமெரிக்க மருத்துவர் (இ. 1955)

1898 – பால் பிராண்டன், பிரித்தானிய மெய்யியலாளர், இறை உணர்வாளர், உலகப் பயணி (இ. 1981)

1911 – மேரி பிளேர், அமெரிக்க ஓவியர் (இ. 1978)

1921 – இங்கிரிடு கிரோயெனவெல்டு, இடச்சு வானியலாளர் (இ. 2015)

1925 – சுர்ஜித் சிங் பர்னாலா, இந்திய அரசியல்வாதி

1929 – அர்சலா கே. லா குவின், அமெரிக்க எழுத்தாளர்

1931 – சம்மி கபூர், இந்திய நடிகர் (இ. 2011)

1936 – பாரூக் அப்துல்லா, இந்திய அரசியல்வாதி, ஜம்மு-சாசுமீர் முதலமைச்சர்

1937 – தேங்காய் சீனிவாசன், தமிழ் நாடக, திரைப்பட நடிகர், (இ 1988)

1940 – ஜெப்ரி போய்கொட், ஆங்கிலேயத் துடுப்பாளர்

1942 – கிறிஸ்டோபர் ஆல்பர்ட் சிம்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்

1943 – தாரிக் அலி, பாக்கித்தான் வரலாற்றாளர், நூலாசிரியர்

1944 – இழான் பியர் சோவாழ்சு, பிரான்சிய வேதியியல் ஆய்வாளர்

1949 – பெஞ்சமின் நெத்தனியாகு, இசுரேலின் 9வது பிரதமர்

1958 – ஆந்தரே கெய்ம், நோபல் பரிசு பெற்ற உருசிய-ஆங்கிலேய இயற்பியலாளர்

1969 – வேல்ராஜ், தமிழகத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர்

1978 – சங்கீதா கிரிஷ், தமிழக நடிகை, வடிவழகி, பின்னணிப் பாடகி

1980 – கிம் கர்தாசியன், அமெரிக்க நடிகை

1982 – மாட் டல்லாஸ், அமெரிக்க நடிகர்

இன்றைய இறப்புகள்


1805 – ஹோரஷியோ நெல்சன், ஆங்கிலேயத் தளபதி (பி. 1758)

1835 – முத்துசுவாமி தீட்சிதர், இந்தியப் புலவர், கருநாடக இசை மும்மூர்த்திகளுள் ஒருவர் (பி. 1775)

1949 – புனித சியன்னா நகர கத்ரீனம்மாளின் லாரா, கொலம்பிய கத்தோலிக்கப் புனிதர் (பி. 1874

1967 – எய்னார் எர்ட்சுபிரங்கு, தென்மார்க்கு வேதியியலாளர், வானியலாளர் (பி. 1873)

1984 – டி. எஸ். சௌந்தரம், இந்திய மருத்துவர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், சமூக சீர்திருத்தவாதி (பி. 1904)

2002 – யெசே இலியோனார்டு கிரீன்சுடைன், அமெரிக்க வானியலாளர் (பி. 1909)

2010 – அய்யப்பன், இந்தியக் கவிஞர் (பி. 1949)

2012 – யஷ் சோப்ரா, இந்திய இயக்குநர் (பி. 1932)

2014 – கஃப் விட்லம், ஆத்திரேலியாவின் 21வது பிரதமர் (பி. 1916)

2015 – வெங்கட் சாமிநாதன், தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர்

இன்றைய சிறப்பு நாள்


இந்தியக் காவலர் நினைவு நாள் (இந்தியா)