இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு தொடர்பான கண்காட்சி வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 7) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற உள்ளது. இதனை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிடலாம்.
உலக விண்வெளி வாரத்தையொட்டி இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு தொடர்பான கண்காட்சி வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 7) தொடங்க உள்ளது. தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ராஜீவ்சிங் தொடக்கி வைக்க உள்ளார். கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிடலாம். கட்டணம் கிடையாது.
இந்த கண்காட்சியில் ராக்கெட், பல்வேறு அறிவியல் கண்டு பிடிப்புகள், அதுதொடர்பான தகவல்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. இதேபோல், அறிவியல் கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.
குறிப்பாக மாணவர்களுக்கு வினாடி-வினா, ஓவியம், பேச்சுப் போட்டிகள், சுவரொட்டி, மாதிரி வடிவமைப்பு போட்டிகள் ஆகியவையும் நடைபெற உள்ளன. போட்டிகளில் பங்கேற்க Q (TLDLILD LDT 600T QT https://wsw.vit.ac.in Group 0600001 யதளம் வழியாக தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
கண்காட்சியையொட்டி விண்வெளி நடைபயணம் (Space Walk) என்ற விழிப்புணர்வு நடைபயணம் சனிக்கிழமை காலை சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து விஐடி பல்கலைக்கழகம் வரை நடைபெற உள்ளது. இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் மாணவர்கள் பங்கேற்லாம். இந்த தகவல் விஐடி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.