குறள் : 913

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று.

மு.வ உரை :

பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல் இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.

கலைஞர் உரை :

விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்

சாலமன் பாப்பையா உரை :

பொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளரின் போலித் தழுவல், இருட்டு அறையில் முன்பு அழியாத பிணத்தைத் தழுவுவது போலாம்.

Kural 913

Porutpentir Poimmai Muyakkam Iruttaraiyil
Edhil Pinandhazheei Atru

Explanation :

The false embraces of wealth loving women are like (hired men) embracing astrange corpse in a dark room.

Horoscope Today: Astrological prediction for October 25 2022




இன்றைய ராசிப்பலன் - 25.10.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


25-10-2022, ஐப்பசி 08, செவ்வாய்க்கிழமை, அமாவாசை திதி மாலை 04.18 வரை பின்பு வளர்பிறை பிரதமை. சித்திரை நட்சத்திரம் பகல் 02.16 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சர்வ அமாவாசை. தனிய நாள். சூரிய கிரஹணம் பகல் 2.28 மணி முதல் 6.32 மணி வரை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் - 25.10.2022 | Today rasi palan - 25.10.2022

மேஷம்

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும்.

ரிஷபம்

இன்று பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். மனஅமைதி இருக்கும்.

மிதுனம்

இன்று கடின உழைப்பால் மட்டுமே வேலையில் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றத்தை அடையலாம்.

சிம்மம்

இன்று எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வண்டி, வாகனம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். 

கன்னி

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். 

துலாம்

இன்று குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சி நடைபெறும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். திருமண பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலை உண்டாகும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். வேலையில் தடைப்பட்ட ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

தனுசு

இன்று வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்களில் அனுகூலப் பலன் கிட்டும்.

மகரம்

இன்று வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். குடும்ப தேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் அறிமுகம் ஏற்படும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் கிட்டும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பண விஷயத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001