குறள் : 911
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.
மு.வ உரை :
அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல் ஒருவனுக்கு துன்பத்தைக் கொடுக்கும்.
கலைஞர் உரை :
அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்
சாலமன் பாப்பையா உரை :
அன்பால் நம்மை விரும்பாது, பொருள் பெறவே விரும்பும் பாலியல் தொழிலாளரின் இனிய சொற்கள் துன்பமே தரும்.
Kural 911
Anpin Vizhaiyaar Porulvizhaiyum Aaidhotiyaar
Insol Izhukkuth Tharum
Explanation :
The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from afection but from avarice will cause sorrow.
Horoscope Today: Astrological prediction for October 23 2022
இன்றைய ராசிப்பலன் - 23.10.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
23-10-2022, ஐப்பசி 06, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி மாலை 06.03 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. உத்திரம் நட்சத்திரம் பகல் 02.34 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பகல் 02.34 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சிவராத்திரி விரதம். சிவ வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிப்பலன் - 23.10.2022 | Today rasi palan - 23.10.2022
மேஷம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். பிள்ளைகளின் பழக்கத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.
ரிஷபம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளித்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சிக்கனமாக செயல்படுவது நல்லது. இதுவரை வராத பழைய கடன்கள் வசூலாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
மிதுனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
கடகம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தோடு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.
சிம்மம்
இன்று எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். மருத்துவ செலவுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.
கன்னி
இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் சாதகமாக செயல்படுவார்கள்.
துலாம்
இன்று எடுக்கும் முயற்சிகளில் தடைகள் உண்டாகலாம். நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
விருச்சிகம்
இன்று- உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பணவரவு தாரளமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு அமையும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.
தனுசு
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும்.
மகரம்
இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். எடுக்கும் முயற்சிகளில் முடிந்த வரை பொறுமையுடன் இருப்பது நல்லது. உறவினர்கள் வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும்.
கும்பம்
இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பண விரயங்கள் ஏற்படும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
மீனம்
இன்று உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். தரும காரியங்கள் செய்து நிம்மதி அடைவீர்கள்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001