சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, திருச்சி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, கடலுார் ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 22ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 21ம் தேதிவரையிலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 20ம் தேதி (நாளை) வரையிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
வேலுார், திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டங்களில் 19ம் தேதி (இன்று) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
அக்டோபர் 19 மற்றும் 22ம் தேதிகளில் திருப்பூரிலும், அக்டோபர் 19, 20 மற்றும் 22ம் தேதிகளில் கரூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரத்திலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலுார், அரியலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 20 முதல் 22ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அக்டோபர் 22ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.