ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலராக கீதா என்ப வரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமைச் செயல் அலுவலர் நியமித்தார்.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலராக கீதா கடந்த 6ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது அவர், 'ராணிப்பேட்டை மாவட்டத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் சார்ந்த பணிகள் சிறப்பாக மேற் கொள்ளப்படும்' என்று தெரிவித்தார்.