ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து அதிகபட்சமாக குவிண்டால் ரூ.5700க்கு விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 75 கிலோ கொண்ட 606 வகை நெல் உயர்ந்த விலையாக ரூ.1930-க்கு நேற்று விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் தற்போது நெல்வரத்து சற்று குறைந்துள்ளது. நேற்று அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு 1586 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. நேற்றைய 75 கிலோ நெல் மூட்டைகளின் விலை விவரம் பின்வரு மாறு:

ஏடிடி 37 வகை குண்டு நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.919க்கும் உயர்ந்த விலையாக ரூ.1573-க்கும், கோ 51 வகை நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1050-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.1561- க்கும், 606 வகை நெல் குறைந்த பட்ச விலையாக ரூ.1159- க்கும், உயர்ந்த விலையாக ரூ.1930-க்கும், சோனா வகை நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1519-க்கும் மற்றும் உயர்ந்த பட்ச விலையாக ரூ.1890-க்கும், சூப்பர் பொன்னி வகை நெல் குறைந்தபட்ச விலை யாக ரூ.1359-க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1432-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில் நேற்று உளுந்து அதிகபட்சமாக குவிண்டால் ரூ.5700 க்கு விற்பனை ஆனது. இதனால் விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தற்போது விவசாயிகள் அம்மூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு எடுத்து வரும் நெல் மூட்டைகள் சற்று குறைவாக உள்ளது. மேற்கண்ட இந்த நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வங்கியில் பணம் செலுத்தப்படுகிறது.

மேலும் இதனால் விவசாயிகள் தற்போது மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

விவசாயிகள் கனிவான கவனத்திற்கு தாங்கள் நெல் அறுவடை செய்து மூட்டைகளை கொண்டு வருவதோடு விட்டுவிடாமல் சோளம் கம்பு, உளுந்து, வேர்க்கடலை, கேழ்வரகு ஆகிய பயிர்களையும் அறுவடை செய்து கொண்டுவர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என அம்மூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண் காணிப்பாளர் சே.ராம மூர்த்தி தெரிவித்தார்.