Milad Nabi Procession in Arcot

ஆற்காடு சந்தப்பேட்டையில் மிலாது நபி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அங்குள்ள மசூதியில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு குலாமானே அஹ்லே பைத்தின் தலைவர் சையது அலி அக்பர் தலைமை தாங்கினார். 

அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலம் கலவை ரோடு வழியாக சென்று கரிமுல்லாசா காதிரி தர்கா வரை நடந்தது. 

இந்த ஊர்வலத்தில் ஆற்காடு, தாஜ்புராவை சேர்ந்த மதராசா மாணவர்கள், இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.