குறள் : 906

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்

அமையார்தோள் அஞ்சு பவர்.


மு.வ உரை :

மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.


கலைஞர் உரை :

அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது


சாலமன் பாப்பையா உரை :

தேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே.


Kural 906

Imaiyaarin Vaazhinum Paatilare Illaal

Amaiyaardhol Anju Pavar


Explanation :

They that fear the bamboo like shoulders of their wives will be destitute of manliness though they may flourish like the Gods.


Horoscope Today: Astrological prediction for October 18 2022


இன்றைய ராசிப்பலன் - 18.10.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


18-10-2022, ஐப்பசி 01, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி பகல் 11.58 வரை பின்பு தேய்பிறை நவமி. நாள் முழுவதும் பூசம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.


இன்றைய ராசிப்பலன் - 18.10.2022 | Today rasi palan - 18.10.2022


மேஷம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோக ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும்.

ரிஷபம்

இன்று குடும்ப உறவுகளிடம் நல்ல ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். புதிய கூட்டாளி சேர்க்கையால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.

மிதுனம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் வேலைபளு அதிகரிக்கும். நண்பர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

கடகம்

இன்று பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்தோடு ஈடுபடுவார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். புதிய பொருள் வாங்குவீர்கள்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் பெரியவர்களின் மாற்று கருத்தால் மனநிம்மதி குறையும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

கன்னி

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கடன்கள் குறையும்.

துலாம்

இன்று ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.

விருச்சிகம்

இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

தனுசு

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

மகரம்

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினை தீரும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நினைத்த காரியம் நிறைவேறும்.

மீனம்

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் இருந்த பணிச்சுமைகள் குறையும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.






கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001