Minister R. Gandhi will inaugurate the exhibition of traditional local crops tomorrow on the occasion of World Food Day
இதுகுறித்து, ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பிரத்யேக வேளாண் பட்ஜெட்டில் மரபணு பன் முகத்தன்மை கண்காட்சி மாவட்டம் தோறும் ஆண்டுக்கு 3 முறையாவது நடத்தப்பட வேண்டும், என்று அறிவிக்கப்பட்டது.
அதன் படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியில் நாளை காலை 9.30 மணி யளவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் உலக உணவு தினத்தையொட்டி பாரம்பரிய உள்ளூர் ரகங்களை விவசாயிகளிடையே பிரபலப்படுத்து வதற்கான கண்காட்சியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைக்க உள்ளார்.
இந்த கண்காட்சியில் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த தனித்துவமான பல்வேறு உள்ளூர் மற்றும் பாரம்பரிய பயிர் வகைகளை விரும்பத்தக்க குணாதிசயங்களுடன் காட்சிப்படுத்தவும், அவற்றை இம்மாவட்ட விவசாயிகளிடையே பிரபலப்படுத்தவும், சாகுபடி தொழில் நுட்பங்களை விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் நேரடியாக கலந்துரையாடல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளால் பாரம்பரிய பயிர் சாகுபடி செய்து, உற்பத்தி செய்த உணவு பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் விற்பனையகம் அமைக்கப்படும். இக்கண்காட்சியில் விவசாயிகளால் அறிமுகப்படுத்தப்படும் உள்ளூர் மற்றும் பாரம்பரிய பயிர்ரகங்கள் வேளாண் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கும் மற்றும் தேர்வு செயல் முறைக்கும் எடுத்து கொள்ள பரி சீலிக்கப்படும்.
மேலும், வேளாண் மற்றும் அதனை சார்ந்த துறைகளும் பங்கு பெற்று உள்ளூர் மற்றும் பாரம்பரிய பயிர் சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விவரங்களை வழங்க உள்ளனர். எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இக்கண்காட்சியில் பங்கு பெறும்விதமாக தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்து பங்கேற்று பயனடைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.