Collector inspects arrangements for book fair starting tomorrow at Walajapet
வாலாஜாவில் அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் புத்தக கண்காட்சி நாளை தொடங்க உள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த கண்காட்சியை அமைச்சர் காந்தி தொடங்கி வைக்கிறார். வருகிற 14ம்தேதி முதல் 22ம்தேதி வரை நடைபெறும்.
இதற்கிடையே புத்தக கண்காட்சிக்காக அரங்கங்கள் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.
இதனை மாவட்ட கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகியோருக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.