ராணிப்பேட்டை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் வழக்கத்துக்கு அதிகமாக இந்த ஆண்டு மழைப்பொழிவு இருந்தது. மேலும், பாலாறு, பொன்னையாற்றில் ஓராண்டாக தண்ணீர் ஓடிய வண்ணம் உள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 369 ஏரிகளில் 99 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் 75 சதவீதத்துக்கும் மேல் 4 ஏரிகளும், 50 சதவீதத்துக்கு மேல் 69 ஏரிகளும், 25 சதவீதத்துக்கும் மேல் 155 ஏரிகளும் நிரம்பியுள்ளன. 42 ஏரிகள் 25 சதவீதம் அளவே நிறைந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்துக்கும் சேர்த்து 8.52 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்க முடியும். இப்போது 5.43 டி.எம்.சி.தண்ணீர் சேமிப்பில் உள்ளது என்று ராணிப்பேட்டை கலெக்டரின் பத்திரிகை குறிப்பு தெரிவிக்கிறது.

இந்நிலையில் பல ஏரிகள் நிரம்பாததற்கு காரணம் ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்கள் துார் நிறைந்துள்ளதும், ஆக்கிரமிப்புகளுமே ஆகும் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.