அப்பாவிற்கு தீபாவளி லோன் சாங்சன் ஆகி விட்டது. என்ற அம்மாவின் மந்திரச் சொல்லை கேட்டதில் ஆரம்பிக்கும் எங்களது தீபாவளி பண்டிகை...😂😂😂

வீடுகளில் பொருளாதார சிக்கணம் காரணமாக ஒரே கலர் துனி எடுத்து அப்பாவிற்கு வேண்டிய டெய்லரிடம் மட்டுமே தைக்க கொடுக்க வேண்டும்..
வளரும் பையன்கள் என்ற அடைமொழிக்காக.கோமாளிகள் போடுவது மாதிரி தொளபுளா  
பேண்ட், சட்டை , தைத்து தருவார் அப்பாவின் அந்த ஆஸ்தான டெய்லர் மாமா...
பென் பிள்ளைகள் என்றாலே பாவாடை தாவணி தான்..
அதில் பிரில் எனப்படும் லேஸ் வைத்து தைத்து தந்து விட்டால் ஏதோ புதையலே கிடைத்தது போல்..😂😂😂

புதுப்படங்கள் போவதற்கு நமக்கு பர்மிஷனும் இருக்காது,துட்டும் இருக்காது.
அதனால் படம் பார்த்து விட்டு வந்த பெரிய அண்ணன்மார்களிடம் கதை கேட்டு ரசிப்போம்.. அதை விட கொடுமை அவர்களது சொந்த சொருகல்களையும் கேட்டுத்தான் ஆக வேண்டும்..😂😂😂

👉 ஒரே ஒரு சீனிவெடி அல்லது ஓலை வெடி பாக்கெட்டை அண்ணன், தம்பிகளுக்குள் பங்கு பிரித்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு வெடியாக எண்ணி எண்ணி வெடித்தது - நினைவில் இருக்கிறது..!!!!🤔
.
👉 தெரு தெருவாக சென்று வெடிக்காத வெடிகளை பொறுக்கி வந்து புதுரக வெடிகளை தானாக தயார் செய்தது - நினைவில் இருக்கிறது..!!🤔

👉 💣வெடிமருந்து அப்பிய கையோடு சாப்பிட அமர்ந்து 👩 அம்மாவிடம் அடி வாங்கியது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 பேப்பரில் 💣 வெடி மருந்துகளை மொத்தமாக சேர்த்து கொளுத்தும்போது ஏற்பட்ட தீக்காயம் - நினைவில் இருக்கிறது..!!

 தீபாவளிக்கு முந்தைய இரவு வரை தைக்க கொடுத்த துனிகள் வீடு வந்து சேரும் வரை எங்களது நிலை..🧐🧐🧐🧐 
.
👉 💣 வெடி வாங்கி வரும் அப்பாவின் வருகைக்காக வாசலில் வந்து வந்து எட்டிப் பார்த்து சென்றது - நினைவில் இருக்கிறது..!!🤔

காலையிலேயே தலைக்கு காய்ச்சிய எண்ணை வைத்து புலி அல்லது யானை மார்க் சீயக்காய் பொடி தேய்த்து குளிப்போம்..

பெரும்பாலான வீடுகளில் இட்லி, தோசை சட்னி, மிளகாய் பொடி கூடவே தீபாவளி பலகாரங்கள். மட்டன் சிக்கன்லாம் பெரிய இடத்து சமாச்சாரங்கள்..😃😃😃
.
👉 💣 வெடிகளை கையில் பிடித்து எரிந்து 👥 பெரியவர்களிடம் 
திட்டு வாங்கியது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 👦 அண்ணே 💣 வெடி இருக்கு, 👧 அக்கா 💣 வெடி இருக்கு என்று 
ரோட்டில் நடந்து வருபவர்களை ஓரமாக நடக்க வைத்து பயமுறுத்தியது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 பிடித்த 👕👖 ஆடைகளை வாங்க முடியாமல் விலை குறைவான 👚👖ஆடைகளை வாங்கி, 👴 அப்பா 👩 அம்மாவிடம் கோபித்துக் கொண்டது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 இன்னமும் 20 நாள் இருக்கிறது, இன்னமும் 10நாள் இருக்கிறது 
என 🎇🎉 தீபாவளியின் வருகைக்காக நாட்களை எண்ணியது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 👩 அம்மா 👴 அப்பா 🎅 தாத்தா 👸 பாட்டி 👳 மாமா என அனைவரிடம் சேகரித்த 🎇 🎉 தீபாவளி காசை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து செலவு செய்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 🎉 🎇 தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும்போது 👖👕👚புத்தாடைகளை அணிந்து சென்று பந்தா காட்டியது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 👩 அம்மா ஒளித்து வைத்த பண்டங்களை யாருக்கும் தெரியாமல் திருடித் திண்றது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 ♨ ஊதுபத்தி"க்கு பதிலாக 🎆 கொசுபத்தியை கொளுத்தி வெடிகளை வெடித்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 🎇 ஒரு மத்தாப்பு அனையப் போகிறது என்று தெரிந்ததும் இன்னொரு 🎇 மத்தாப்பை அதிலேயே ஒட்டி வைத்து எரிய வைத்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 🐍 பாம்பு மாத்திரைகளை வரிசையாக அடுக்கி மாடர்ன் ஆர்ட் போல 💥 கொளுத்தியது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 💣 வெடிக்காத லட்சுமி வெடிக்குள் சீனி வெடியை சொருகி பில்டப் செய்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 தேங்காய் சிரட்டைகளில் 💣 வெடிகளை அமுக்கி வைத்து வெடித்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
அப்போதெல்லாம் ராக்கெட் வெடி மட்டும் தான். பாட்டிலில் வைத்து ராக்கெட் வெடியை அனுப்புவார்கள்.
அதுவும் பனக்காரர்களின் வெடியாக மட்டுமே இருந்தது.
.
👉 மொட்டை மாடியில் நின்றுகொண்டு ஆங்காங்க வெடிக்கும் வானவேடிக்கைகளை பார்த்து கைதட்டி ரசித்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 💣 வெடி பாக்கெட்களை கையில் பிடித்துக்கொள்ள அசிஸ்டென்ட்டை வைத்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
.
👉 முப்பது வருடங்களுக்கு முன்பு நாங்கள் கொண்டாடிய தீபாவளியை இப்போதைய 👦 சிறுவர்களும் 👦 இளைஞர்களும் கண்டிப்பாக கொண்டாட முடியாது..!!🤔
.
👉 இப்போதைய 🎆🎇 தீபாவளி 🍻 குடிப்பதற்கும், 📺 டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும், 🎦 🎬 புதிய படம் பார்ப்பதற்கு மட்டுமே..!! 🤔
.
👉 ஆனால் எங்களுடைய நாட்கள் 

(அப்போதைய 80,90,களின் தீபாவளி ) 

என்றும் காலத்தால் மறக்க முடியாதவை...!.🤔