திருவலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் பிளஸ் 1 பயின்று வந்தார். பெற்றோர் இல்லாததால், பாட்டி பராமரிப்பில் இருந்தார்.

கடந்த 26ம் தேதி வெளியே சென்ற இவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. இதனால் பதட்டமடைந்த பாட்டி, திருவலம் போலீசில் புகார் செய்தார். 

இதுகுறித்து திருவலம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வன் விசாரணை மேற்கொண்டார். 

அதில், சிறுமியை அவரது உறவினரான சென்னையைச் சேர்ந்த பரத் (20) என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்றது தெரியவந்தது.

சிறுமியை மீட்ட போலீ சார், பரத்தை 'போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.