120 liters of liquor smuggled in a lorry tube seized Andhra youth arrested
சோளிங்கர் அடுத்த ஜம்புகுளம் மலையடிவாரத்தில் சாராயம் விற்பதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் மோகன், தனிப்பிரிவு போலீஸ் மகேந்திரன் ஆகியோர் ஜம்புகுளம் பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் லாரி டியூபில் சாராயம் கடத்தி வந்த வாலிபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
சோதனையில் பைக்கில் 120 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பாலசமுத்திரத்தை சேர்ந்த ஜானகிராமன் (34) என்பதும், இவர் ஆந்திரவில் இருந்து சாராயம் கடத்தி வந்து ஜம்புகுளம் மலையடிவாரம் பகுதியில் விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.
இதையடுத்து ஜானகிராமனை கைது செய்து 120 லிட்டர் சாராயம், பைக்கை பறிமுதல் செய்தனர்.