காவேரிப்பாக்கம் ராமாபுரம் காலனி அண்ணா தெருவில் வசித்து வந்த மகேந்திரன்(57). ரோடு வேலைக்கு ஆட்களை திரட்டி சென்று வேலை செய்வார்.
நேற்று ராணிப்பேட்டை அருகே மாந்தாங்கல்லில் நடந்த சாலைப்பணிக்கு ஆட்களை அழைத்துச் சென்று வேலைபார்த்து வந்தார்.
அப்போது ரோடு ரோலர் அவர் மீது மோதியது. ரோடு ரோலர் டிரைவர் அஜாக்கிரதையால் நடந்த இவ்விபத்தில் மகேந்திரன் உடல் நசுங்கி சம்பவ இடத் திலேயே இறந்தார்.
இதுகுறித்து மகேந்திரனின் மகன் பிரவீன்குமார் ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் பார்த்தசாரதி, எஸ்ஐ அண்ணாமலை விசாரணை நடத்தி வருகின்றனர்.