வாலாஜா அடுத்த குடிமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜயப்பன்(40). இவர் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தோல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கருத்து வேறுபாட்டால் கடந்த 15 ஆண்டுகள் முன்பு இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இதனால் அவர் தனிமையில் வசித்து வந்த ஜயப்பன் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்தததாக கூறப்படுகிறது. இதற்கிடையே குடிமல்லூர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையோரம் உள்ள வேப்பமரத்தில் ஒரு ஆண் சடலமாக தூக்கில் தொங்கியடி இருந்ததை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வாலாஜா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு தூக்கில் சடலமாக இருப்பது ஜயப்பன் என்பது உறுதி செய்த பின்னர் சடலத்தை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாலையில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. .