✈ 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி நாசாவின் டீப் ஸ்பேஸ் 1 விண்கலம் பொரெல்லி வால்வெள்ளிக்கு மிக அருகில் 2,200 கி.மீ தூரத்திற்குள் சென்றது.
✈ 2003ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி கலிலியோ விண்கலத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு அது வியாழன் கோளின் வளிமண்டலத்தினுள் அனுப்பப்பட்டு அதனுடன் மோதவிடப்பட்டது.
முக்கிய தினம் :-
உலக அமைதி தினம்
🐦 உலக அமைதி தினம், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டுதோறும் செப்டம்பர் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
🐦 உலக சமாதான முயற்சியின் போது ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் ஹமர்சீல்ட் 1961ஆம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தது வரலாற்று சுவடாக பதிவாகியுள்ளது. இவர் உயிர் துறந்த நாளையே உலக அமைதி தினமாக அனுசரிக்கின்றோம்.
🐦 இதனை அடுத்து 2002ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜ.நா. பிரகடனத்தின் மூலம் செப்டம்பர் 21ஆம் தேதி உலக அமைதி தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
🐦 உலக வரலாற்றில் ஏற்பட்ட கசப்பான மற்றும் சமாதானமற்ற நிகழ்வுகளினால் ஏற்பட்ட உயிர் மற்றும் உடமைகளின் சேதங்களினால் உலக சமாதான தினத்தை உருவாக்கும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டது.
🐦 மனித உள்ளங்களினால் தான் போர் எண்ணம் உருவாக்கப்படுவதால் மனித உள்ளத்தாலே அமைதிக்கான அரண்களும் உருவாக்கப்பட வேண்டும் என்பதே யுனெஸ்கோவின் வாசகமாக அமைந்துள்ளது.
🐦 இன்று உலகில் பல பகுதிகளில் சமாதானத்துடன் தொடர்புடைய நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் இன்று மட்டுமன்றி ஒவ்வொரு நாட்களுமே மனித வாழ்வில் சமாதானம் நிலைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
பிறந்த நாள் :-
ஹெச்.ஜி.வெல்ஸ்
✍ வரலாறு, அரசியல், சமூகம் ஆகிய அனைத்து களங்களிலும் தனது படைப்புகளால் தனிமுத்திரை பதித்த ஹெச்.ஜி.வெல்ஸ் (Herbert George Wells) 1866ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள ப்ரூம்ளி நகரில் பிறந்தார்.
✍ இவரது முதல் நாவலான தி டைம் மெஷின் 1895-ல் வெளிவந்து, மகத்தான வெற்றி பெற்று, இலக்கிய உலகில் பரபரப்பாக பேசப்படும் எழுத்தாளர் ஆனார்.
✍ இவர் தொடர்ந்து அறிவியல் புனைகதைகள் எழுதி வந்தார். 1920-ல் வெளிவந்த அவுட்லைன் ஆஃப் தி வேர்ல்டு புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது. தி ஐலண்ட் ஆஃப் டாக்டர் மாரோ, தி இன்விசிபிள் மேன், தி வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ், தி ஷேப் ஆஃப் திங்ஸ் டு கம் ஆகிய நூல்கள் இவருக்கு பெயரையும் புகழையும் ஈட்டித் தந்தது.
✍ வாழ்நாளில் சுமார் 50 ஆண்டு காலம் எழுத்திற்காக தன்னை அர்ப்பணித்த தொலைநோக்கு எழுத்தாளர் ஹெச்.ஜி.வெல்ஸ் தனது 80-வது வயதில் (1946) மறைந்தார்.
இன்றைய நிகழ்வுகள்தொகு
455 – பேரரசர் அவிட்டசு தனது இராணுவத்துடன் உரோம் சென்றடைந்து தனது ஆளுமையை உறுதிப்படுத்தினார்.
1170 – டப்லின் இராச்சியம் நோர்மன்களின் முற்றுகைக்கு உள்ளானது.
1776 – நியூயார்க் நகரம் பிரித்தானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து நகரின் ஒரு பகுதி தீக்கிரையானது.
1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது.
1843 – ஜான் வில்சப் மகெல்லன் நீரிணையை சிலி அரசுக்காக உரிமை கோரினார்.
1860 – இரண்டாம் அபினிப் போர்: ஆங்கிலேய-பிரெஞ்சுப் படைகள் சீனப் படைகளைத் தோற்கடித்தன.
1896 – பிரித்தானியப் படைகள் சூடானின் டொங்கோலா நகரைக் கைப்பற்றினர்.
1898 – பேரரசி டோவாகர் சிக்சி சீனாவின் ஆட்சியைக் கைப்பற்றினார். நூறு-நாள் சீர்திருத்த எழுச்சி முடிவுக்கு வந்தது.
1921 – செருமனியில் தொழிற்சாலைக் களஞ்சியம் ஒன்றில் இடம்பெற்ற பெரும் வெடி விபத்தில் சிக்கி ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.
1934 – சப்பானில் மேற்கு ஒன்சூ பகுதியில் இடம்பெற்ற சூறாவளி காரணமாக 3,036 பேர் உயிரிழந்தனர்.
1938 – நியூ யோர்க்கின் லோங் தீவில் சூறாவளி காரணமாக 500 முதல் 700 வரையானோர் உயிரிழந்தனர்.
1939 – உருமேனியா பிரதமர் ஆர்மண்ட் கலினெஸ்கு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1942 – பெரும் இன அழிப்பு: யோம் கிப்பூர் யூத விடுமுறை நாளன்று மேற்கு உக்ரைனில் 2588 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர்.
1942 – உக்ரைனில் துனைவ்த்சி நகரில் 2,588 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1949 – மக்கள் சீனக் குடியரசு நிறுவப்பட்டது.
1964 – மால்ட்டா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது. ஆனால் பொதுநலவாயத்தில் தொடர்ந்தது.
1965 – காம்பியா, மாலைத்தீவுகள், சிங்கப்பூர் ஆகியன ஐநாவில் இணைந்தன.
1971 – பகுரைன், பூட்டான், கத்தார் ஆகியன ஐநாவில் இணைந்தன.
1972 – பிலிப்பீன்சு அரசுத்தலைவர் பேர்டினண்ட் மார்க்கொஸ் முழு நாட்டிலும் இராணுவ ஆட்சியைப் பிறப்பித்தார்.
1976 – சீசெல்சு ஐநாவில் இணைந்தது.
1981 – பெலீசு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தத
1984 – புரூணை ஐநாவில் இணைந்தது.
1989 – இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜினி திரணகம யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1990 – மட்டக்களப்பு ஆரையம்பதியில் புதுக்குடியிருப்பு கிராமத்தில் 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1991 – ஆர்மீனியா, சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
1993 – உருசியத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் நாடாளுமன்றத்தைக் கலைத்து, அரசியலமைப்புச் சட்டத்தை ரத்துச் செய்தார்.
1999 – தாய்வானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,400 பேர் கொல்லப்பட்டனர்.
2001 – நாசாவின் டீப் ஸ்பேஸ் 1 விண்கலம் பொரெல்லி வால்வெள்ளிக்குக் கிட்டவாக 2,200 கிமீ தூரத்திற்குள் சென்றது.
2003 – கலிலியோ விண்கலத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு அது வியாழனின் வளிமண்டலத்தினுள் அனுப்பப்பட்டு அதனுடன் மோதவிடப்பட்டது.
2013 – இலங்கையின் வட மாகாண சபைக்கு முதல் தடவையாகத் தேர்தல் நடைபெற்றது.
2013 – கென்யாவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் அல்-சபாப் இசுலாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 67 பேர் கொல்லப்பட்டனர்.
இன்றைய பிறப்புகள்தொகு
1832 – லூயி பால் கையேட்டே, பிரான்சிய இயற்பியலாளர், கண்டுபிடிப்பாளர் (இ. 1913)
1853 – ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ், நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (இ. 1926)
1866 – எச். ஜி. வெல்ஸ், ஆங்கிலேய எழுத்தாளர், வரலாற்றாளர் (இ. 1946)
1909 – குவாமே நிக்ரூமா, கானாவின் அரசுத்தலைவர் (இ. 1972)
1910 – எம். டி. பார்த்தசாரதி, தமிழக கருநாடக இசைக் கலைஞர், திரைப்பட இசையமைப்பாளர் (இ. 1963)
1921 – சரோஜினி வரதப்பன், தமிழக சமூக செயற்பாட்டாளர் (இ. 2013)
1924 – தமிழ்ஒளி, புதுவைக் கவிஞர் (இ. 1965)
1926 – டொனால்ட் எ கிளாசர், அமெரிக்க இயற்பியலாளர், நரம்பியல் அறிஞர் (இ. 2013)
1927 – ஜி. கே. வெங்கடேஷ், தென்னிந்திய இசையமைப்பாளர் (இ. 1993)
1930 – எஸ். ஏ. கணேசன், தமிழக அரசியல்வாதி
1931 – சிங்கீதம் சீனிவாசராவ், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்
1934 – தாவீது தூலீசு, நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய இயற்பியலாளர்
1939 – அக்னிவேஷ், இந்திய மெய்யியலாளர், அரசியல்வாதி
1944 – ஜெ. சுத்தானந்தன், கல்வியாளர், சமூக சேவகர் (இ. 2010)
1947 – ஸ்டீபன் கிங், அமெரிக்க நூலாசிரியர்
1954 – சின்சோ அபே, சப்பானின் 90வது பிரதமர்
1957 – கெவின் ரட், ஆத்திரேலியாவின் 26வது பிரதமர்
1963 – ஜீவா, இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் (இ. 2007)
1963 – கேட்லி அம்ப்ரோஸ், அண்டிக்குவா துடுப்பாட்ட வீரர்
1965 – பிரமிளா செயபால், இந்திய-அமெரிக்க அரசியல்வாதி
1979 – கிறிஸ் கெயில், யமெய்க்கத் துடுப்பாளர்
1980 – கரீனா கபூர், இந்திய நடிகை
1983 – மேகி கிரேஸ், அமெரிக்க நடிகை
இன்றைய இறப்புகள்தொகு
கிமு 19 – வேர்ஜில், உரோமைக் கவிஞர் (பி. கிமு 70)
1558 – ஐந்தாம் சார்லசு, புனித உரோமைப் பேரரசர் (பி. 1500)
1576 – கார்டானோ, இத்தாலியக் கணிதவியலாளர், மருத்துவர், சோதிடர் (பி. 1501)
1743 – இரண்டாம் ஜெய் சிங், ஜெய்ப்பூர் அரசர் (பி. 1688)
1950 – ஆர்த்தர் மில்னே, பிரித்தானிய வானியற்பியலாளர், கணிதவியலாளர் (பி. 1896)
1958 – பி. எஸ். பாலிகா, இந்திய எழுத்தாளர், பதிப்பாளர் (பி. 1908)
1967 – அல்பர்ட் பீரிசு, இலங்கை அரசியல்வாதி (பி. 1905)
1971 – பெர்னார்டோ ஊசே, நோபல் பரிசு பெற்ற அர்க்கெந்தீன மருத்துவர் (பி. 1887)
1976 – பெஞ்சமின் கிரகாம், பிரித்தானிய-அமெரிக்கப் பொருளியல் நிபுணர் (பி. 1894)
1989 – ராஜினி திரணகம, இலங்கை மனித உரிமை மற்றும் பெண் உரிமை செயற்பாட்டாளர் (1954)
2000 – லியோனித் இரகோசொவ், உருசிய மருத்துவர் (பி. 1934)
2005 – காரை சுந்தரம்பிள்ளை, ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1938)
2007 – விஜயன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
2008 – டி. பி. விஜயதுங்கா, இலங்கையின் 4வது அரசுத்தலைவர் (பி. 1922)
2011 – ஜோ அபேவிக்கிரம, சிங்களத் திரைப்பட நடிகர் (பி. 1927)
இன்றைய சிறப்பு நாள்தொகு
மரியாவின் பிறப்பு (கிழக்கு மரபுவழி திருச்சபை, யூலியன் நாட்காட்டி)
சம இரவு நாள் (வடக்கு அரைக்கோளம்)
உலக அமைதி நாள்
விடுதலை நாள் (ஆர்மீனியா, சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991)
விடுதலை நாள் (பெலீசு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1981)
விடுதலை நாள் (மால்ட்டா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1964)