ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் நாளை நவீன செயற்கை கால் பொருத்த அளவீடு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகாவைச் சேர்ந்த கை, கால்கள் துண்டிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நவீன செயற்கை கை மற்றும் கால்கள் வழங்கிட அளவீடு செய்யப்பட உள்ளது.
எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்க்களது தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மருத்துவச் சான்று, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம், பழைய குடும்ப அட்டை, புதிய ஸ்மார்ட் கார்ட், எக்ஸ் ரே ரிப்போர்ட், டிஸ்சார்ஜ் சம்மரி ஆகியவற்றுடன் கலவை ஸ்ரீரடி சாய் மஹால் திருமண மண்டபத்திற்கு நாளை காலை 9.30 மணிக்கு நேரில் வர வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு செயற்கை கை கால் பெற்று பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.