குறள் : 888
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு
துட்பகை உற்ற குடி
மு.வ உரை :
உட்பகை உண்டான குடி அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப் பட்டு தேய்ந்து போகும்.
கலைஞர் உரை :
அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும்
சாலமன் பாப்பையா உரை :
அரத்தால் தேய்க்கப்படும் இரும்பு தேய்வது போல, உட்பகை கொண்ட குடு?ம்?பமும் கட்சியும் அரசும் தமக்கும் பொருது தம் பலம் இழக்கும்.
Kural 888
Aramporudha Ponpolath Theyum Uramporudhu
Utpakai Utra Kuti
Explanation :
A family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away.
Horoscope Today: Astrological prediction for September 30 2022
இன்றைய ராசிப்பலன் - 30.09.2022 | Indraya Raasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Nalla Neram | Indraya Panchangam
30-09-2022, புரட்டாசி 13, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி இரவு 10.35 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 04.18 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் பின்இரவு 04.18 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 30.09.2022 | Today rasi palan - 30.09.2022
மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். காலதாமதமாக முடிய கூடிய காரியங்கள் கூட எளிதில் முடியும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
மிதுனம்
இன்று வியாபாரத்தில் உங்கள் பேச்சு திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலைபளு குறையும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
சிம்மம்
இன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையக்கூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
கன்னி
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பொன் பொருள் சேரும்.
துலாம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். புதிய சொத்துக்கள் வாங்கும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பிள்ளைகள் வழியில் சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பொன் பொருள் சேரும்.
தனுசு
இன்று உங்களுக்கு வரவை விட செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை காணப்படும். உத்தியோக ரீதியான பிரச்சினைகளால் டென்ஷன் ஏற்படும். வேலையாட்களை அனுசரித்து சென்றால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். எதிர்பாராத உதவி கிட்டும்.
மகரம்
இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் எதிர்பார்க்காத லாபம் கிட்டும். திருமண சம்பந்தமான முயற்சிகள் நற்பலனை தரும். செலவுகள் குறையும்.
கும்பம்
இன்று நீங்கள் எதிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் ஒற்றுமை கூடும். குடும்பத்தில் சிக்கனமுடன் செயல்படுவதால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வங்கி சேமிப்பு உயரும்.
மீனம்
இன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001