குறள் : 878

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்

பகைவர்கண் பட்ட செருக்கு


மு.வ உரை :

செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால் பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.


கலைஞர் உரை :

வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம் தானாகவே ஒடுங்கி விடும்


சாலமன் பாப்பையா உரை :

ஒரு செ?யலைச் செய்ய வேண்டிய முறையை அறிந்து, நம்மைப் பலப்படுத்துவதுடன் ரகசியங்களையும் நாம் காத்துக் கொண்டால், பகைவர் தங்கள் மனத்துள் நம்மை எதிர்க்க எண்ணிய ?செருக்கு அழியும்?.


Kural 878

Vakaiyarindhu Tharseydhu Tharkaappa Maayum

Pakaivarkan Patta Serukku


Explanation :

The joy of one’s foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance.

Horoscope Today: Astrological prediction for September 20 2022



இன்றைய ராசிப்பலன் - 20.09.2022 | Indraya Nalla Neram | Indraya Raasi Palan



இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam 

20-09-2022, புரட்டாசி 03, செவ்வாய்க்கிழமை, தசமி திதி இரவு 09.27 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 09.06 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. முருக வழிபாடு நல்லது. 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.


இன்றைய ராசிப்பலன் - 20.09.2022 | Today rasi palan - 20.09.2022

மேஷம்

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். கடன் பிரச்சினை குறையும்.

ரிஷபம்

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். நண்பர்களால் மனநிம்மதி குறையும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். பெரியவர்களின் ஆதரவு மனதிற்கு நம்பிக்கையை தரும்.

மிதுனம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளி வட்டார நட்பால் அனுகூலம் உண்டாகும். 

கடகம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் ஒற்றுமை குறைவு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். எந்த செயலையும் சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

கன்னி

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை அளிக்கும். திடீர் பணவரவு உண்டாகும்.

துலாம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். சேமிப்பு குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

விருச்சிகம்

இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு பகல் 02.23 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் வியாபார ரீதியான புதிய முயற்சிகளை மதியத்திற்கு பிறகு மேற்கொண்டால் அனுகூலப் பலன் உண்டாகும்.

தனுசு

இன்று உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளால் மன உளைச்சல் அதிகமாகும். உங்கள் ராசிக்கு பகல் 02.23 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது, வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

மகரம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும்.

கும்பம்

இன்று மன உறுதியோடு செயல்பட்டால் மட்டுமே எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற முடியும். பெற்றோர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழிலில் சில புதிய மாற்றங்களை செய்தால் லாபம் கிட்டும். உத்தியோகத்தில் பணிசுமை குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் ஆர்வமின்றி இருப்பீர்கள். உறவினர்களால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.




கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001