திருவலம் அடுத்த கார்ணாம்பட்டைச் சேர்ந்த ஆறுமுகம்(57). விவசாயி. இவருக்கு திருமணமாகி யசோதா எனும் மனைவியும் ஒரு மகள், மகன் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது. மகன் பி.இ., இன்ஜினியரிங் படித்து விட்டு கோவையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். ஆறுமுகம் பல மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம்.
இந்நிலையில் கடந்த 15ம் தேதி வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது வயிற்று வலி அதிகமாகி கத்தரிக்காய் தோட்டத்துக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிகொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார்.
வேலூர் தனியார் ஆஸ் பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று காலை இறந்தார். திருவலம் எஸ்ஐ ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.