ஆந்திராவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனாலும் மேலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ராணிப்பேட்டை பாலாற்றில் இருபுறங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டு இருக்கிறது.
இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மேற்கண்ட ராணிப்பேட்டை பாலாற்றில் தற்போது ஓடும் பெறு வெள்ளத்தை பார்த்து பரவசமும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை பாலாற்றில் ஓடும் மழை வெள்ளம் காரணமாக புதுப்பாடி அணைக்கட்டு வெகுவாக நிரம்பியது.
இதிலிருந்து காவேரிப்பாக்கம் ஏரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் ஏரிகள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் என பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாலாற்றில் வெள்ளம் அதிகமாக செல்வதால் ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் கலெக்டர் அறிவுறுத் தியுள்ளார்.
அதன்பேரில் மாவட்ட காவல்துறை அதிகாரிகளும் உடனடியாக உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.