ராணிப்பேட்டையில் 50 நாட்களில் ஆயிரம் கிலோ மீட்டர் நடக்கும் 50 நாள் சவால் போட்டி துவக்க விழா நேற்று நடந்தது.
ராணிப்பேட்டை ஜாலி ரன்னர்ஸ் குழு சார்பில் நடக்கும் இந்த போட்டி துவக்க விழாவுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து கொடியசைத்து ஓட்டம், நடை போட்டியை துவக்கி வைத்தார்.
சீக்கராஜபுரம் பஞ்.தலைவர் சியாமளாதின கரன், சமூக சேவகர் நல்லசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஜாலிரன்னர்ஸ் குழு தலைவர் சரவணன், மேலாளர் பெரியகருப்பன், பொருளாளர் ஜானகி, பயிற்சியாளர்கள் கதிர்வேல், பால்சத்தியன் மற்றும் சீனிவாசரெட்டி, கணேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.