Book Fair at Arinagar Anna College of Arts and Science in Walajapet on 9th Oct
ராணிப்பேட்டை மாவட்டம் உதயமாகி முதன்முதலாக புத்தகக் கண்காட்சி நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்துக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில் பேசிய கலெக்டர்," ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புத்தகம் வாசிப்பாளர்கள், மாணவர்கள் அதிகப்படியான புத்தகங்களை வாங்கி பயன்பெறும் வகையில் மாவட்டத்தில் முதன் முறையாக 10 நாள் புத்தககண்காட்சி நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 9ம் தேதி முதல் வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கண்காட்சி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் 75க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கவும் மற்றும் பல்வேறு துறைக்ளின்சார்பாக பணி விளக்க கண்காட்சிகள் அமைக்கப்படும். கண்காட்சி நடை பெறும் அனைத்து நாட்களிலும் மாலையில் கலை நிகழ்ச்சிகளும், புகழ் பெற்ற பேச்சாளர்களின் நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள் போன்றவைகளும் நடத்தப்படும்.
புத்தக கண்காட்சி மாபெரும் வெற்றி அடைய மாவட்டத்தில் உள்ள அனைத்து குக்கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த துறைசார்ந்த 7 அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கண்காட்சி நடத்துவதற்கான அடுத்தகட்ட பணியாக பேருந்து வசதி, பாதுகாப்பு வசதி, மின் வசதி, பொது அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி குமரேஸ்வரன், கலெக்டரின் உதவியாளர் (பொது) சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் பூங்கொடி, பாத்திமா, டிஎஸ்பி பிரபு மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.