குறள் : 872

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

சொல்லேர் உழவர் பகை


மு.வ உரை :

வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும் சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது.


கலைஞர் உரை :

படைக்கலன்களை உடைய வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம் ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை கொள்ளக் கூடாது


சாலமன் பாப்பையா உரை :

விலலை ஆயுதமாகக் கொண்ட வீரரோடு பகை கொண்டாலும், சொல்லை ஆயுதமாகக் கொண்ட எழுத்தாளரோடு பகை கொள்ள வேண்டா.


Kural 872

Viller Uzhavar Pakaikolinum Kollarka

Soller Uzhavar Pakai


Explanation :

Though you may incur the hatred of warriors whose ploughs are bows incur not that of ministers whose ploughs are words.


Horoscope Today: Astrological prediction for September 14 2022


இன்றைய ராசிப்பலன் - 14.09.2022 | Indraya Rasi Palan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


14-09-2022, ஆவணி 29, புதன்கிழமை, சதுர்த்தி திதி பகல் 10.26 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. அஸ்வினி நட்சத்திரம் காலை 06.57 வரை பின்பு பரணி. மரணயோகம் காலை 06.57 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. மஹாபரணி. 

இராகு காலம் | Indraya Nalla Neram

மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 

இன்றைய ராசிப்பலன் - 14.09.2022 | Today rasi palan - 14.09.2022


மேஷம்

இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.

மிதுனம்

இன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

கடகம்

இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

சிம்மம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உடன் பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது, வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. முடிந்தவரை புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

துலாம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். சேமிப்பு உயரும். பெண்களுக்கு வேலைபளு குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறைந்து நிம்மதி ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் லாபம் பெருகும். தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகளும் அதிகரிக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் விருத்திக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை தரும்.

மகரம்

இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

கும்பம்

இன்று உங்களுக்கு உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரியம் கைகூடும்.

மீனம்

இன்று குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் குறையும்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001