குறள் : 869
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
மு.வ உரை :
அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால் அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும்.
கலைஞர் உரை :
அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்
சாலமன் பாப்பையா உரை :
நீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த நன்மைகள் விலக மாட்டா.
Kural 869
Seruvaarkkuch Chenikavaa Inpam Arivilaa
Anjum Pakaivarp Perin
Explanation :
There will be no end of lofty delights to the victorious if their foes are (both) ignorant and timid.
Horoscope Today: Astrological prediction for September 11 2022
இன்றைய ராசிப்பலன் - 11.09.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
11-09-2022, ஆவணி 26, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி பகல் 01.15 வரை பின்பு தேய்பிறை துதியை. பூரட்டாதி நட்சத்திரம் காலை 08.02 வரை பின்பு உத்திரட்டாதி. சித்தயோகம் காலை 08.02 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.
இராகு காலம் | Indraya Nalla Neram
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிப்பலன் - 11.09.2022 | Today rasi palan - 11.09.2022
மேஷம்
இன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரக்கூடும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
ரிஷபம்
இன்று புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு உண்டாகும். பிள்ளைகளின் செயல்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மிதுனம்
இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த பொருளாதார பிரச்சினைகள் குறையும். புதிய வண்டி வாகனம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
கடகம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சுபசெலவுகள் அதிகமாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் சற்று குறையும். உடன் பிறப்புகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் கிட்டும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. மற்றவர் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். சுபகாரியங்கள் மற்றும் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
கன்னி
இன்று குடும்பத்தில் பெரியோர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபசெலவுகள் செய்ய நேரிடும். தொழில் விஷயமாக வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சேமிப்பு உயரும்.
துலாம்
இன்று குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்கள் மூலம் நினைத்த காரியம் நிறைவேறும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணங்களால் நற்பலன் கிட்டும்.
விருச்சிகம்
இன்று ஆடம்பர செலவுகளால் பணப்பிரச்சினை உண்டாகலாம். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்களின் சந்திப்பு நன்மையை தரும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் உண்டாகும்.
தனுசு
இன்று உங்களுக்கு வரவிற்கு மீறிய செலவுகள் இருக்கும். நண்பர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் அலைச்சலுக்குப் பின் அனுகூலப் பலன் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
மகரம்
இன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். சுப செலவுகள் உண்டாகும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். நீங்கள் செய்ய நினைத்த செயல்கள் பாதியில் தடைப்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் உதவியுடன் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீனம்
இன்று இல்லத்தில் மனம் மகிழும் நிகழச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001