அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும் செப்டம்பர் 8ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்..

உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத,, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.

யுனெஸ்கோவின் "அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை (2006)" அறிக்கையின்படி , தெற்கு மற்றும் மேற்கு ஆசியாப் பகுதிகளிலேயே மிகக் குறைந்த வீதமானோர் (வயது வந்தோரில்) (58.6%) படிப்பறிவில்லாமல் உள்ளனர். அதற்கு அடுத்த படியாக உள்ள பகுதிகள் ஆபிரிக்கா (59.7%), அரபு நாடுகள் (62.7%). தனிப்பட்ட நாடுகளை எடுத்துக் கொண்டால் மிகக் குறைந்த எழுத்தறிவில்லாதோர் புர்கினா பாசோ (12.8%), நைஜர் (14.4%), மாலி (19%). அறிக்கையின் படி எழுத்தறிவின்மைக்கும் நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.

எழுச்சி தரும் எழுத்தறிவு! :

உலக எழுத்தறிவு தினம்


ஒருவர் சமூக, பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு எழுத்தறிவு அவசியம். உலகில் இனம், மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஐ.நா., சார்பில் 1966ம் ஆண்டு முதல் செப்., 8ல், சர்வதேச எழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 'எழுத்தறிவு மற்றும் பன்மொழி பேசுதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

எது எழுத்தறிவு


ஒரு மொழியில் புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். எழுத்தறிவு பெற்றவராக கருத, குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை. எழுத்தறிவு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால் தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும்.

என்ன பயன்


எழுத்தறிவு, அடிப்படைக் கல்வியின் இதயம் போன்றது. கல்வி என்பது அறிவு வளர்ச்சி என்ற நிலையையும் தாண்டி அது உலக ஒற்றுமைக்கான ஓர் அடையாளமாகத் திகழ்கிறது. எழுத்தறிவு பெறுவதன் மூலம் வறுமை, குழந்தை திருமணம், மக்கள் தொகை பெருக்கம், வேலைவாய்ப்பின்மை, பாலின வித்தியாசம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தடுக்க முடியும்.


உலகளவில் ஏழாயிரம் மொழிகள் பேசப்படுகின்றன.


15 - 24 வயதுக்குட்பட்டவர்களின் உலக சராசரி எழுத்தறிவு சதவீதம் 86.3. இந்தியாவின் எழுத்தறிவு 2011 சென்சஸ் படி, 86.1 சதவீதம்.

10ஐம்பது ஆண்டுகளுக்கு முன், 15 - 24 வயதுக்குட்பட்டவர்களில் நான்கில் ஒரு பங்கு பேர், எழுத, படிக்க தெரியாதவர்களாக இருந்தனர். தற்போது இது 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.


உலகில் 75 கோடி பேர் எழுத்தறிவு அற்றவர்களாக உள்ளனர். இதில் மூன்றில் 2 பங்கு பேர் பெண்கள். 2030க்குள் அனைவருக்கும் எழுத்தறிவு கிடைக்க வேண்டும் என 'யுனெஸ்கோ' அமைப்பு இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஏற்றம் தரும் எழுத்தறிவு: இன்று உலக எழுத்தறிவு தினம்: செப் 08,


கல்விக்கு அடிப்படையாக விளங்குவது எழுத்தறிவு. இது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால் தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும். சமூக மற்றும் மனித முன்னேற்றத்துக்கு இது அவசியம். எனவே எழுத்தறிவு பெறுவது ஒருவரின் கடமை; அவசியம்; கட்டாயம். உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக செப்., 8ம் தேதி உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஏதாவது ஒரு மொழியில், புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். மற்றபடி, எழுத்தறிவு பெற்றவராக கருத, குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை.

என்ன பயன்:


எழுத்தறிவு, அடிப்படைக் கல்வியின் இருதயமாக உள்ளது. எழுத்தறிவு பெறுவதன் மூலம் வறுமை, குழந்தை திருமணம், மக்கள் தொகை பெருக்கம், வேலைவாய்ப்பின்மை, பாலின வித்தியாசம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தடுக்க முடியும். எழுத்தறிவு மூலம், அமைதி மற்றும் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியும். இது இன, மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். எழுத்தறிவு பெற்ற பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கமாட்டர்.

ஆப்ரிகாவில் குறைவு:


வயது வந்தோரில் 10 கோடி பேர் எழுத்தறிவு அற்றவர்களாக உள்ளனர். உலகில் எழுத்தறிவற்றவர்களில் மூன்றில் 2 பேர் பெண்கள். எழுத்தறிவற்றவர்களில் 98 சதவீதம் பேர் வளரும் நாடுகளில் உள்ளனர். ஆப்ரிகா கண்டத்தில், எழுத்தறிவு சதவீதம் 60க்கும் குறைவு. வளரும் நாடுகளில் 6 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளில் 15 சதவீதம் பேர் பள்ளி செல்லவில்லை என யுனெஸ்கோ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் நிலை:


2011 சென்செஸ் கணக்கின் படி, இந்தியாவின் எழுத்தறிவு, 74 சதவீதமாக உள்ளது. இதில் ஆண்கள் 82.14 சதவீதம், பெண்கள் 65.46 சதவீதம். இது 2001ம் ஆண்டு கணக்கெடுப்பை விட 9.2 சதவீதம் அதிகம். தமிழக எழுத்தறிவு சதவீதம், 80.4 சதவீதமாக உள்ளது. இது 2001ம் ஆண்டு கணக்கெடுப்பை விட 6.9 சதவீதம் அதிகம். எழுத்தறிவில் கேரளா முதலிடத்திலும், பீகார் கடைசி இடத்திலும் உள்ளது. நாட்டில் எழுத்தறிவு சதவீதம் ஓரளவுக்கு அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.

உலக எழுத்தறிவு தினம்


ஒவ்வொருவரும் எழுத்தறிவு பெறுவது அவசியம் மற்றும் கடமை. இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக "யுனெஸ்கோ' நிறுவனத்தால் ஆண்டுதோறும் செப்., 8ம் தேதி, உலக எழுத்தறிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. எந்த ஒரு மொழியையும் சரளமாக எழுதவும், படிக்கவும் தெரியாமல் இருப்பதே எழுத்தறிவின்மை என கருதப்படுகிறது.

ஐந்தில் ஒன்று: உலகளவில் 15 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினர் 77 கோடியே 60 லட்சம் பேர், அடிப்படை எழுத்தறிவு இல்லாதவர்களாக உள்ளனர். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் பெண்களாக உள்ளனர். ஐந்து இளைஞர்களில், ஒருவர் எழுத்தறிவு இல்லாதவராக உள்ளார். 7 கோடியே 50 லட்சம் குழந்தைகள் பள்ளிகளுக்கே செல்வதில்லை மற்றும் பலர் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடுகின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜார்ஜியா முதலிடம்: யுனெஸ்கோவின் 2008ம் ஆண்டு புள்ளி விவரத்தின் படி, உலகிலேயே தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவில் தான் எழுத்தறிவு சதவீதம் (58.6%) குறைந்த அளவில் உள்ளது. அடுத்த படியாக அரபு நாடுகள் (62.7%) உள்ளன. உலகின் சராசரி எழுத்தறிவு 84 சதவீதம். ஜார்ஜியா நாடு 100 சதவீத எழுத்தறிவு பெற்றுள்ளது. இந்தியாவில் 15 வயதுக்குட்பட்டோரின் எழுத்தறிவு 66 சதவீதமாகவும், இளைஞர்களின் எழுத்தறிவு 88 சதவீதமாகவும் உள்ளது. இந்திய மாநிலங்களில் 2001ம் கணக்கெடுப்பின் படி, கேரளா 90.92 சதவீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. பீகார் (47.53 சதவீதம்) கடைசி இடத்தில் உள்ளது. தமிழ்நாடு 73.47 சதவீதத்துடன் 13 இடத்தில் உள்ளது.

புதிய இலக்கு: நாட்டில் 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு "கல்வி அடிப்படை உரிமை மற்றும் கட்டாய கல்வி' என்ற சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினால் எழுத்தறிவு இல்லாதவர்களே இந்தியாவில் இல்லை என்ற நிலையை உருவாக்கலாம்.

அறிவுடையார் எல்லாம் உடையார்...! (இன்று உலக எழுத்தறிவு தினம்)


அறிவு ஒரு கூர்மையான ஆயுதம்... அறிவுடையார் எல்லாம் உடையார். அவ்வகையில், எழுத்தறிவுதான் இந்தச் சமூகத்தின் ஆணிவேர் ஆகும். எழுத்தறிவின்மையை, ஒரு குற்றம் என்று கூறியுள்ளார் காந்தியடிகள். இதெல்லாம் எதற்கு இப்போது என யோசிக்கிறீர்களா? இன்று, (செப்-8) உலக எழுத்தறிவு தினம்.

எழுத்தறிவு தினம்!


ஐ.நா. அமைப்பின் அங்கமாகிய யுனிஸ்கோ எழுத்தறிவுப் பெற்றவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், எழுத்தறிவு இல்லாதவர்கள் இல்லா உலகை உருவாக்கவும் 1965-ம் ஆண்டு, முதன்முதலில் உலக எழுத்தறிவு தினத்தினை செப்டம்பர் 8-ம் தேதி நடத்தியது. அந்த மாநாட்டில்தான் உலக எழுத்தறிவின்மையை அகற்ற மேற்கொள்ளப்பட வேண்டியவை பற்றிய அறிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 1966 செப்டம்பர் 8 முதல் உலக எழுத்தறிவு தினம் பிரகடனம் செய்யப்பட்டது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தைத் தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும் உணரவைப்பதே இந்தத் தினத்தின் நோக்கம்.

எழுத்தறிவின்மை!


ஒரு மொழியில் எழுத்துக்களை எழுதவும், படிக்கவும் தெரியாமல் இருத்தல் எழுத்தறிவின்மை என்று கூறப்படுகிறது. உலகின் பலதரப்பட்ட விவரங்கள் எழுத்துக்களாக விரவிக்கிடக்கும் வேளையில், எழுத்தறிவின்மையால் அவற்றை உணர்ந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எழுத்தறிவு பிரச்னைதான் கல்வியால் தீர்க்கப்பட வேண்டிய மிகப்பெரிய சமூகப் பிரச்னையாகக் கருதப்படுகிறது. 2011-ம் ஆண்டு கணக்குப்படி, இந்தியாவில் 74 சதவிகிதம் பேர் எழுத்தறிவுப் பெற்றவர்களாக உள்ளனர். இதில் 82 சதவிகிதம் ஆண்களும், 65 சதவிகிதம் பெண்களும் உள்ளனர். இதன்படி எழுத்தறிவில், கேரளா முதல் இடத்திலும், பீகார் கடைசி இடத்திலும் உள்ளது. யுனெஸ்கோவின், ‘அனைவரும் கல்வி பற்றிய உலக அறிக்கை’யின்படி, தெற்கு மற்றும் மேற்கு ஆசியா பகுதிகளில் எழுத்தறிவு இல்லாதவர்கள் மிகக் குறைந்த அளவில் உள்ளனர்.

எழுத்தறிவின்மையும், பிரச்னைகளும்!


எழுத்தறிவைப் பெறமுடியாததற்கான சமூக நிலை தொடர்பானவைகளில் கவனம் செலுத்தப்பட்டது. வறுமை, ஆரோக்கியமின்மை, அரசியல் நெருக்கடிகள், கலாசார பாகுபாடு, அடிமைப்படுத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் உலக நாடுகளில் இன்றும் எழுத்தறிவின்மை காணப்படுகிறது. எழுத்தறிவு என்பது மனித உரிமைகளுடன் தொடர்புபட்ட ஓர் அம்சம். தனிநபர் ஆளுமையிலிருந்து சமூக மனிதவள அபிவிருத்தி மற்றும் கல்விச் செயல்பாடுகள், அதற்கான சந்தர்ப்பங்கள் என்பன எழுத்தறிவிலேயே தங்கியுள்ளன. எழுத்தறிவின்மை வாசிக்க, எழுதத் தெரியாமை என்பதையும் தாண்டி, நாட்டின் பல்வேறு முன்னேற்றங்களுக்குத் தடையாக இருக்கும். நம் நாட்டைப் பொறுத்தவரையில், பொருளாதாரம் போன்றவற்றுக்குக் கல்வியே பிரதானம். எனினும், கடந்த தலைமுறையில் இருந்து கல்வியால் முன்னேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வது மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலான விஷயம். பொதுவாக எழுத்தறிவு ஒரு மொழியை வாசிக்க, பேச, கேட்டுப் புரிந்துகொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும்.

எழுத்தறிவு மிகவும் முக்கியம்!


எழுத்தறிவு, ஒரு தனியாளுக்குத் தன்னுடைய இலக்கை அடைவதற்கும், தனது அறிவையும், தகுதியையும் வளர்ப்பதற்கும், பரந்த சமூகத்தில் தனது பங்கினை முழுமையாக ஆற்றுவதற்கும் உதவுவது. ஆகையால், எழுத்தறிவு என்பது மிகவும் முக்கியமானது. இந்த நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும் எழுத்தறிவு என்பது உண்ணும் உணவைவிடவும், பார்க்கும் கண்ணைவிடவும் முக்கியம் பெறுகிறது. கல்வியும் எழுத்தும் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படித்து முடித்தவுடன் முடிவதில்லை. அது வாழ்நாள் முழுவதும் திகழவேண்டும். கல்விக்கும் எழுத்துக்களுக்கும் முடிவே கிடையாது...