3 youths were injured when a car collided with a bike near Melvisharam next to Arcot


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் ஹாஜிப்பேட்டை 1வது தெருவை சேர்ந்தவர் அனீஸ்ரகுமான் (26), மேல்விஷாரம் உஸ்மான்பேட்டை 3வது தெருவை சேர்ந்தவர் சாகிப்  (26). நண்பர்களான இவர்கள் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை பணி முடித்துவிட்டு. இருவரும் ஒரே பைக்கில் வீடுதிரும்பினர்.

மேல்விஷாரம் பைபாஸ் சாலை சந்திப்பு பகுதி வழியாக வந்தபோது வேலூரில் இருந்து ராணிப்பேட்டை நோக்கி வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவர். சிசிடிவி கேமரா கம்பம் ஆகியவற்றை மோதி எதிர்ப்புறத்தில் பாய்ந்து அங்கு அனீஸ் ரகுமான் வந்த பைக் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த ராணிப்பேட்டை அடுத்த நவல்பூரை சேர்ந்த ஆல்பியஸ் வேலன்டைன் (33) மற்றும் அனீஸ் ரகுமான், சாகிப் ஆகிய 3 பேரும் படு காயமடைந்தனர். இவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனை மற்றும் மேல்விஷாரம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆற்காடு டவுன் எஸ்ஐ மகாராஜன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.