நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை அமிர்த பெரு விழாவாக நாடு முழுவதும் பல வகைகளில் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து சிப்பாய் புரட்சி நடந்த வேலூர் கோட்டை வரலாற்று சிறப்புமிக்கது.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இந்த கோட்டை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அகழியின் எதிரே உள்ள மதில் சுவரில், மூவர்ணக் கொடியின் வண்ணத்தை போல் மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டது. இரவு நேரங்களில் கோட்டையில் ஒளிரும் தேசியக் கொடியின் வண்ணம், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
வரும் 15ம் தேதி வரை இந்த மின்விளக்கு மூவர்ணக் கொடியின் வண்ணத்தில் கோட்டைமிளிரும் என தொல்லியல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.