Two-wheelers collide: One killed
ஆற்காடு அடுத்த கரடி மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (26). இவர் தனது மனைவி ஜான்சி ராணி (23). மகன் யுகன் (4) ஆகியோருடன் டூவீலரில் கரடிமலையிலிருந்து திமிரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
காவனூர், பக்தவச்சலம் நகர் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த மற்றொரு டூவீலர் சரவணன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்த-சரவணன், ஜான்சிராணி, யுகன் ஆகியோரை அக்கம்பக்கத் தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர் தலையில் அடிபட்டதால் சரவணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரி வித்தார். ஜான்சிராணி, யுகன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்.