US-based Triton Electric Vehicle is set to enter India with hydrogen-powered two-wheelers
எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் டெஸ்லாவுக்கு போட்டியாக இருக்கும் டிரைட்டன் இவி நிறுவனம். ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கக்கூடிய டூவீலர்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இவை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளன.
குஜராத் மாநிலத்தில் புஜ் பகுதியில் 600 ஏக்கர்கள் பரப்பளவில் டிரைட்டன் அமைத்து வரும் தொழிற்சாலையில் தான் ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்கள் தயாரிக்கப்பட உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,800 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள டிரைட்டன். அகமதாபாத்தில் தனது ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையத்தையும் நிறுவி வருகிறது.