ஆம்பூர் விண்ணமங்கலம் பகுதியில் டபுள் டக்கர் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே கோவை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது.
Trains were halted here and there due to cracks in the tracks

வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே உள்ள நியூ டவுன் ரெயில்வே கேட் அருகே இன்று காலை தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது. இதனை கண்ட ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து சென்னையில் இருந்து கோவை சென்ற கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரு நோக்கி சென்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் மற்றும் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

வாணியம்பாடி ரெயில் நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தண்டவாளம் சரி செய்யப்பட்டது. தொடர்ந்து நடுவழிகளில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றன.