Buzz is that actress Trisha will be pairing up with Vijay for the fifth time in her career in Thalapathy67.
ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் விஜய்யின் 67-வது படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த படத்தில் 6 வில்லன்கள் என்றும் வில்லன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் பிருதிவிராஜ் உள்ளிட்ட பலரிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதில் விஜய் ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் பரவி உள்ளது. திரிஷா, விஜய் ஜோடியாக குருவி படத்தில் நடித்து இருந்தார்.
13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் ஜோடியாக நடிக்க வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதனை உறுதிப்படுத்த வில்லை. மலையாள படத்தில் மோகன்லால் ஜோடி யாக திரிஷா நடித்து வருகிறார்.