Suspense-Thriller Story: 'Last 6 Hours' Starring Bharath in Different Roles Releases Today in Tamil-Malayalam
லேசி கேட்புரொடக்சன்ஸ் சார்பில் அனூப் காலித் தயாரிப்பில் சுனிஷ்குமார் இயக்கியுள்ள படம், 'லாஸ்ட் 6 அவர்ஸ்'. பரத், விவியாசாந்த், ஆதில் இப்ராஹிம், அனுமோகன், அனூப் காலித் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் சுனிஷ்குமார் கூறியதாவது:வெவ்வேறு துறைகளில் பணி புரியும் 4 பேர், ஒரு திருட்டின் மூலம் வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கின்றனர். இறுதியில் என்ன நடக்கிறது? என்பதுதான் இந்த படமாக உருவாகியுள்ளது.தமிழ் சினிமாவின் மாறுபட்ட சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் பரத் அதிரடியில் மிரட்டியுள்ளார். அவரது சண்டை காட்சியில் அனல் தெறிக்கும். இந்த படத்துக்காக தனது உடற்கட்டை கடுமையான பயிற்சிகள் மூலம் வடிவமைத்துள்ளார். இந்த படம் அவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக நிச்சயம் இருக்கும். அவரது அர்ப்பணிப்புமிக்க உழைப்பு இந்த படத்தின் மிகப்பெரிய பலம்.
சீனு சித்தார்த் ஒளிப்பதிவில், கைலாஷ் மேனனின் பின்னணி இசையில், நடிகர்- நடிகைகளின் அற்புதமான நடிப்பில், திரைக்கலைஞர்களின் கடின உழைப்பில் படம் எதிர்பார்ப்புக்கு அதிகமாகவே நன்றாக வந்திருக்கிறது. இந்த படம் அதிரடி-ஆக்ஷனை விரும்பும் ரசிகர்க ளுக்கு மாபெரும் விருந்து. வித்தியாச மான கதையம்சங்களை விரும்பும் ரசிகர் கள் தாண்டி அனைத்து தரப்பினரையும் இந்த படம் கவரும். இந்த படம் இன்றைய தினம் வெளியாகிறது. எம்.எஸ்.எம். மூவி டிரேடர்ஸ் செண்பக மூர்த்தி இந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்.
நல்ல படங்களை என்றுமே ஆதரித்து அங்கீகரிக்கும் ரசிகர்கள், இந்த படத்தை வெற்றிப்படமாக்குவார்கள் என்று நம்புகிறோம். படத்தின் டிரெய்லர், பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு படத்துக்கு நிச்சயம் இருக்கும். அனைவரும் இந்த படத்தை தியேட்டருக்கு வந்து பார்த்து ரசிக்க வேண்டும், என கூறினார்.