வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு கிராமத்தில் தேசியநெடுஞ்சாலை அருகே, அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த வரதராஜ வைகுண்ட பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் நேற்று இரவு மஹா சுதர்சன ஹோமம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த மஹா சுதர்சன ஹோமத்தில் அக்னி குண்டத்தில் சிறப்பு பூஜைகள் செய்து புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தத்தினை கலசத்தில் வைத்து மந்திரங்கள் முழங்க பல் வேறு மூலிகை பொருட்களைக் கொண்டு யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
பின்பு புண்ணிய தலங்களில் இருந்துகொண்டு வரப்பட்ட நீர்கலசத்தில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட புண்ணிய தீர்த்த கலசத்தை தலையில் சுமந்தவாறு கோவில் பிரகாரங்களை பக்தியுடன் சுற்றி வந்து கோவில் கருவறைக்குள் கொண்டு சென்று வேத மந்திரங்கள் முழங்க தீர்த்தத்தினை பெருமாளுக்கு சிறப்பு ஜல அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுவாமி சிலைகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து தீபாரதனை காட்டப்பட்டன. அதைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் வைகுண்ட பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி ஆகியோரை பக்தி பரவசத்துடன் வழிபட்டு சென்றனர்.