ராணிப்பேட்டை பிஞ்சி ஏரியை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ராணிப்பேட்டை முத்துக்கடை பிஞ்சி ஏரியானது சுமார் 26 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. பிஞ்சி ஏரியில் ₹45 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள பூங்கா, சூரிய சக்தி மின் ஒளியுடன் உலக தரத்துடனான சுற்றுச்சூழல் பூங்காவாக இருக்கும். மேலும் பிஞ்சி ஏரியில் அமையவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நன்னீர் தேக்கம், தீவு, மலர் பூங்கா, சிறுவர் பூங்கா, நடைபயிற்சி மேடை, நவீன சுகாதார வளாகங்கள். பூங்காவில் நடவு செய்யப்படவுள்ள பலவகை மரக்கன்றுகள் குறித்து மாதிரி வடிவமைப்வடிவமைப்புடன் இருப்பதை அமைச்சர் ஆர். காந்தி மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி ஆகியோர் மாதிரி வடிவமைப்பு படத்துடன் விளக்கினர். 
இந்நிகழ்ச்சியில் எஸ்.பி. தீபா சத்யன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சிவ்தாஸ்மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர்" பா.பொன்னையா, நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், நகராட்சி ஆணையாளர் ஏகராஜ். நகராட்சி பொறியாளர் ருத்ரகோட்டி நகரமன்றதுணை தலைவர் ரமேஷ் கர்ணா, மாவட்ட அவைத்தலைவர் அசோகன், மாவட்ட துணை செயலாளர் ஏ.கே. சுந்தரமூர்த்தி, நகர செயலாளர்கள் ராணிப்பேட்டை பூங்காவனம், மேல்விஷா ரம் அமீன்பாய், வாலாஜா தில்லை, சோளிங்கர் கோபி, அரக்கோணம் வி.எல். ஜோதி, ஆற்காடு ஏவிசரவணன், ராணிப்பேட்டை நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன். வினோத், குமார், ஜெயசங்கீதா அசேன், தென்றல் ஜெய்கணேஷ், கோபிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.