ராணிப்பேட்டை அருகே கொளத்தேரி கிராமம் பெரிய தெருவில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கருமாரியம்மன் கோயில் கட்டி ஊர்மக்கள் வழிபாடு நடத்தி வந்தனர்.
சாலை விரிவாக்க பணியால் கோயில் தாழ்ந்து சாலை உயர்ந்துவிட்டது. கோயிலும் சிதிலமடைந்தது.
ஆகவே ஊர்மக்கள் ஒன்று கூடி கோயிலை புதுப்பிக்க முடிவெடுத்து பணிகளை ஆரம்பித்தனர்.
இந்நிலையில் கோயில் அருகாமையில் இரண்டு, மூன்று பேர் கோயிலை கட்ட தடை ஏற்படுத்து வதுடன் அரசு அதிகாரிகளுக்கு பெட்டிஷன் போடு கின்றனர்.
இந்நிலையில் பெரும் பான்மையான ஊர்மக்கள் கோயிலை புதுப்பிக்கும் பணியை தொடர வேண்டும். கோயில் கட்டுவதற்கு அனுமதி வேண்டும் என்று கோரி கிராம மக்கள் சார்பாக பஞ். துணைத்தலைவர் கணேசன், இந்து முன்னணி வேலூர் கோட்ட அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோருடன் வந்து ராணிப்பேட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இதில் பஞ். வார்டு மெம்பர் ரமேஷ், ராணிப்பேட்டை இந்து முன்னணி பொதுச்செயலாளர் சதீஷ்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.