India's First Statue of Mahatma Gandhiji Installed in Tamil Nadu, Ranipet on February 12, 1949 by Lorry Owners Association Muthukadai.
இந்திய தேசத்துக்காக, தனது இன்னுயிரையே தந்தவர் மகாத்மாகாந்தி. அவர் உயிர்துறந்த சில நாட்களிலேயே அவரது முழு உருவச்சிலை முதன் முதலில் தமிழகத்தில்தான் நிறுவப்பட்டது.
ராணிப்பேட்டை லாரி உரிமையாளர் சங்கத்தினர் சார்பில், 300 ரூபாய் செலவில் சென்னையில் வடிவ மைக்கப்பட்ட இந்த சிலை, ராணிப்பேட்டை முத்துக்கடையில் 1949ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி நிறு வப்பட்டது. அதன்பிறகு, முத்துக்கடை நான்குமுனை சந்திப்பு 'காந்தி சவுக்' என்றே அழைக்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக அந்த இடத்திலிருந்த சிலையை, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது என்றும், சிலை பழுதடைந்துள்ளது என்றும் காரணம்காட்டி. சிலையும், பீடமும் அகற்றப்பட்டன. அதன்பிறகு, மக்கள் கோரிக்கையை ஏற்று, ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அந்த சிலை நிறுவப்பட்டது.
இதையடுத்து, வெண்கலத்தாலான மகாத்மா காந்தியின் முழு உருவச் சிலை, ராணிப்பேட்டை எம்எல்ஏ காந்தி முயற்சியால் வடிவமைக்கப்பட்டது. தொடர்ந்து, முத்துக் கடையில் நீரூற்றுடன் கூடிய பூங்கா உருவாக்கி, அங்கு காந்தி சிலை நிறுவப்பட்டது. அதை 2008ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்துவைத்தார். கருணாநிதி திறந்துவைத்த ஒரே ஒரு காந்தி சிலை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.