The Long Distance Cycle Race in London covers 1,540 km in 125 hours.  2 people from Vellore passed the record

வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், லண்டனில் நெடுந்தொலைவு சைக்கிள் போட்டியில் கலந்து கொண்ட வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரமோத்குமார், ராஜ்குமார் ஆகியோரை மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ பாராட்டினார். உடன் திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத்காந்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நெடுந்தொலைவு சைக்கிள் போட்டி நடக்கிறது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை இப்போட்டி நடந்தது. இதில் இந்தியா சார்பில் 160 பேர் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

லண்டனில் தொடங்கி ஸ்காட்லாந்து தலைநகரான இடின்பராக் வரை சென்று மீண்டும் லண்டனுக்கு திரும்பும் இப்போட் டியில் 1,540 கிலோ மீட்டர் தூரத்தை 128 மணி நேரத்திற்குள் கடக்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி இப்போட்டியில் வேலூரை சேர்ந்த பிரமோத்குமார், ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு 125 மணி நேரத்தில் தூரத்தை கடந்து சாதனை படைத்தனர்.
இவர்களுக்கான பாராட்டு விழா வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் பங்கேற்று வாழ்த்தி பேசுகையில், 'சாதனை படைக்க வயது ஒரு தடை இல்லை. 70 வயதுள்ள
நமது முதல்வர்சைக்கிளில் மாமல்லபுரம் வரை செல் கிறார். சைக்கிள் போட்டியில் பங்கேற்று வேலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த 2 பேரையும் பாராட்டுகிறேன். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்' என்றார்.
தொடர்ந்து திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத்காந்தி பங்கேற்று வாழ்த்தினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, கே.வி.குப்பம் முன்னாள் பொருளாளர் சிட்டிபாபு, பகுதி செயலாளர் தங்கதுரை, மற்றும் பிரமோத்குமார், ராஜ்குமார் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.