LIC's new scheme to renew expired policies
காலாவதியாகிவிட்ட பாலிசிகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான திட்டத்தை எல்ஐசி அறிமுகப் படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
பிரீமியம் தொகை செலுத்தாமல் காலாவதியான பாலிசிகளை வாடிக்கையாளர்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப் படுகிறது.
கடந்த புதன்கிழமை (ஆக. 17) தொடங்கிய இந்தத் திட்டம், அக்டோபர் 21-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
இந்த திட்டத்தின் கீழ், கடைசி பிரீமியம் செலுத்தி 5 ஆண்டுகள் வரை ஆன பாலிசிகளை வாடிக்கையாளர்கள் புதுப்பித்துக் கொள்ளலாம். யூலிப் பாலிசிகளைத் தவிர அனைத்து பாலிசி களையும் இந்தத் திட்டத்தின்கீழ் புதுப்பித்துக்கொள்ளலாம்.
ரூ.3 லட்சம் வரையிலான நிலுவைத் தொகை இருந்தால் 25 சதவீதமும் அதற்கு மேல் நிலுவைத் தொகை இருந்தால் 30 சதவீதமும் தாமதக் கட்டணம் வசூலிக் கப்படும்.
எனினும், நிலுவைத் தொகையைப் பொருத்து அந்தக் கட்டணத்தில் ரூ.2,500 முதல் ரூ.3,500 வரை தள்ளுபடி செய்யப்படும். மைக்ரோ காப்பீட்டு பாலிசிகளுக்கு தாமதக் கட்டணம் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.