வீட்டு வசதி கடன் வழங்கும் நிறுவனமான எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ், தனது கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
LIC Housing Finance has hiked its loan interest rate

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை கடந்த மே மாதத்தில் இருந்து 1.40 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதன் எதிரொலியாக, எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸும் தனது கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: நிறுவனம் வழங்கி வரும் முதன்மை கடன்களுக் கான வட்டி விகிதம் (எல்ஹெச்பிஎல்ஆர்) 0.50 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. அத்துடன், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 7.50 சதவீ தத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரெப்போ விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தும் ரிசர்வ் வங்கியின் முடிவு, வீட்டுக் கடன்களுக்கான மாதாந்திர தவணைகளிலும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான மாதங்களின் எண்ணிக்கையிலும் குறைந் தபட்ச பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் தலைமை நிர்வாகி மற்றும் நிர்வாக இயக்குநர் ஒய் விஸ்வநாத கௌட் கூறினார். மேலும், இந்த சிறிய வட்டி விகித உயர்வுக்குப் பிறகும் வீட்டுக் கடன்களுக்கான தேவை தொடர்ந்து அமோகமாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.