குறள் : 859

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை

மிகல்காணும் கேடு தரற்கு


மு.வ உரை :

ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான் தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.


கலைஞர் உரை :

ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான் ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்


சாலமன் பாப்பையா உரை :

ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.


Kural 859

Ikalkaanaan Aakkam Varungaal Adhanai

Mikalkaanum Ketu Thararku


Explanation :

At the approach of wealth one will not think of hatred (but) to secure one’s ruin one will look to its increase.

Horoscope Today: Astrological prediction for September 01 2022


இன்றைய ராசிப்பலன் - 01.09.2022 | Indraya Rasi Palan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

01-09-2022, ஆவணி 16, வியாழக்கிழமை, பஞ்சமி திதி பகல் 02.49 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. சுவாதி நட்சத்திரம் இரவு 12.12 வரை பின்பு விசாகம். அமிர்தயோகம் இரவு 12.12 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ரிஷி பஞ்சமி விரதம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் |Indraya Nalla Neram 

மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் - 01.09.2022 | Today rasi palan - 01.09.2022

மேஷம்

இன்று இல்லத்தில் இனிய செய்தி வந்து சேரும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணப்பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். புதிய நபரின் அறிமுகம் கிட்டும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும்.

மிதுனம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலை உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கடகம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் அலட்சியத்தால் வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். எதிலும் நிதானம் தேவை.

சிம்மம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் திறமைக்கேற்ப பதவி உயர்வு கிட்டும். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் உண்டாகும். 

கன்னி

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு தேவையில்லாத இடமாற்றத்தால் மன நிம்மதி கெடும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும்.

துலாம்

இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும்.

விருச்சிகம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதமாகும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பெண்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

தனுசு

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்

இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புத்திர வழியில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வருமானம் பெருகும்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிந்தித்து செய்வதே சிறந்தது. எதிர்பாராத பயணங்களால் அலைச்சலும், வீண் விரயங்களும் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். 

மீனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும். உத்தியோகத்தில் கவனம் தேவை.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001