தேவையானவை:
- ஸ்வீட் பிரெட் - 6 ஸ்லைஸ்,
- முட்டை - 4.
- பால் - ஒரு கப்,
- சர்க்கரை கப் (இனிப்புச்சுவை அதிகம் வேண்டும் என்பவர்கள், சர்க்கரையின் அளவைக் கூட்டிக்கொள்ளவாம்),
- நெய் - கால் கப்,
செய்முறை
காய்ச்சிய பால். முட்டை, சர்க்கரை மூன்றையும் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளுங்கள். (கவனிக்கவும்: பால் நன்கு ஆறியிருக்க வேண்டும். சூடாக இருந்தால், முட்டை அந்த சூட்டுக்கு வெந்துவிடும்)
தோசைக்கல்லைக் காயவைத்து, சிறிது நெய் தடவி, ஒரு பிரெட்டை எடுத்து. முட்டை கலவையில் நனைத்தெடுத்து சுல்லில் போட்டு, சுற்றிலும் நெய் ஊற்றி திருப்பிப்போட்டு எடுத்துப் பரிமாறுங்கள்.