விநாயகர் சதுர்த்தி விழாவில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் உயிரிழந்தான்.
குடியாத்தத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 18). கடந்த சில தினங்களுக்கு முன்தான் கல்லூரியில் சேர்ந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு விநாயகர் சிலைகளை வைத்து மின் வேலைப்பாடு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி ராஜேஷ் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.