Collector Bhaskara Pandiyan Hoisted the National Flag for Independence Day Celebrations at Ranipet
75-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 75-வது சுதந்திரத் தின நிகழ்ச்சியானது ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட்டது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
முன்னதாக போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்.பி. தீபா சத்யன் ஆகியோர் போலீஸ் அணி வகுப்பு மரியதையை ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, காவல்துறை, மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.
இதனை தொடர்ந்து வருவாய் துறை பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், ஊரக வளர்ச்சி துறைகளின் சார்பாக 237 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சத்து 69,092 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.