திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டில் நடைபெறும் முக்கிய விழக்களை தேவஸ்தானம் வெளியிட்டு உள்ளது.
திருப்பதி, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டு மாதம்
- 1-ந் தேதி ஆண்டாள் திருவாடிபூர சாத்துமுறை, புரசைவாரி தோட்டத்துக்கு உற்சவர் மலையப்பசாமி எழுந்தருள்கிறார்.
- 2-ந் தேதி கருடபஞ்சமியையொட்டி கருடசேவை,
- 6-ந் தேதி தரிகொண்டா வெங்கமாம்பா பிறந்த நாள்,
- 8-ந் தேதியில் இருந்து
- 10-ந் தேதி வரை வருடாந்திர பவித்ரோற்சவம்,
- 9-ந் தேதி நாராயணகிரி பூங்காவில் சத்ரஸ்தாபனோற்சவம்,
- 11-ந் தேதி சிரவண பவுர்ணமி, ரக்ஷா பந்தம் பண்டிகை, வைகானச மகாமுனி ஜெயந்தி.
- 12-ந் தேதி ஹயக்ரீவர் ஜெயந்தி, உற்சவர் மலையப்பசாமி வைகானச சன்னதிக்கு எழுந்தருளல்,
- 15-ந் தேதி சுதந்திர தினம்,
- 19-ந் தேதி கோகுலாஷ்டமி ஆஸ்தானம்,
- 20-ந் தேதி உறியடி உற்சவம்,
- 29-ந் தேதி பலராமர் ஜெயந்தி,
- 30-ந் தேதி வராஹ ஜெயந்தி,
- 31-ந் தேதி விநாயக சவிதி (விநாயகர் சதுர்த்தி விழா).
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.